அக்கா அசிஸ்டன்ட் கமிஷனர் ராகவன் வந்திருக்காரு க்கா. சீக்கிரம் அண்ணனை கூப்பிடுங்க. ராயபுரம் மணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான்.
ராயபுரம் மணி - என்ன வேணும் சார்
ராகவன் - காத்தால உன்ன பார்க்கணும் என்கிற அவசரத்துல எதுவும் சாப்புடாம வந்துட்டேன். நாலு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி சொல்லு.
மணி - புரியலை சார்
என்ன - நீதான கேட்டே என்ன வேணுமுன்னு.
மணி - விளையாடாதீங்க சார் .
ராகவன் - நீ என்ன சானியா மிர்சா வா இல்லை மல்லிகா செராவத்தா உன்கூட விளையாட.
மணி - மல்லிகா செராவத், சினமா நடிக்கறவங்க சார்.
ராகவன் - விடுயா, தெரியாம சொல்லிட்டேன், கண்டுக்காத.
மணி - சார் , எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு கேக்கறேன் சார்.
ராகவன் - என்னோட கண்ணை கேட்டியாமே .
மணி - இல்லையே சார்.
ராகவன் - ஆ... இந்த ராகவன் தொல்ல தாங்க முடியாலை, எப்ப பார்த்தாலும் நம்மளையே தொல்ல பண்றான். காசிற சாரயதுல பாதி இவனே கேட்டு குடிச்சிடறான். அவனால பெரிய பிரச்சினையா இருக்கு. அவன் கண்ணை கொண்டாரவங்களுக்கு, ரெண்டு லட்சம் தரேன்னு நீ சொன்னதா ஒரு பரதேசி நாயி சொல்லிச்சி. இப்ப என்ன நீ ராயபுரம் மணி இல்லேன்னு சொல்ல போறியா.
மணி - உண்மையாலுமே சார், நான் ராயபுரம் மணி இல்ல சார். இங்கிருந்து நாலு வீடு தள்ளி போயி கேளுங்க. அவரு வீடு அங்க தான் இருக்கு.
ராகவன் - அப்படியா சாரி சார், தெரியாம நிறைய பேசிட்டேன். நான் போயிட்டு வரேன் சார்.
சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதேபோல் கதவை ஒரு உதை உதைத்து அதே இடத்துக்கு வருகிறார் ராகவன்.
ராகவன் - ஏன்டா நாய். அங்க கெட்ட நீ தான் மணி நு சொல்றாங்க. எதுக்குடா பொய் சொன்னே. மறுபடியும் கதவை எட்டி உதைச்சதுல என்னோட கட்ட விரல்ல அடி பட்டுடிச்சி.
மணி - எதுக்கு சார் அதை எட்டி உதைச்சே. லேசா கையாள தள்ளினாலே திறக்குமே.
ராகவன் - இந்த இடத்துல நான் அப்படி தான் கதவை உதைக்கணும். சரி நீ எதுக்கு இப்படி பண்ணினே.
மணி - நீ என்ன எப்படி ஆரம்பத்துல கலாய்ச்சே, அதுக்காக உன்னை ஒரே ஒரு வாடி நான் கலாய்ச்சி பார்த்தேன்.
ராகவன்- சரி டயலாக் கு வருவோம். எதுக்கு காசு எல்லோருக்கும் குடுத்துகுட்டு நானே வந்துட்டேன். என் கண்ணை எடுத்துக்கோ என்று சற்றென்று குனிந்து தன்னுடைய ஷூவில் ஏதோ தேடுகிறார் ராகவன் .
மணி - என்ன சார் தேடறீங்க.
ராகவன் - வற்ற அவசரத்துல கத்திய ஷூவுல வைக்க மறந்துட்டேன்.
மணி - கொஞ்சம் இருங்க . இந்தாமே அந்த ஆப்பிள் வெட்டுற சின்ன கத்தி குடு. என்று அதை வாங்கி ராகவனிடம் தருகிறார்.
பிறகு ராகவன் கத்தியை வாங்கிக்கொண்டு,அதை மறுபடியும் மணியிடம் குடுத்து தன கண்ணை எடுக்க சொல்கிறான். அனால் மணி பயந்து அதை செய்ய மறுக்கிறான். பிறகு
ராகவன் - அது . பசங்களா நீங்க எல்லாம் வேற வேலை பார்த்துக்கோங்கப்பா. மணி நீ நாளைக்கி காத்தால பத்துமணிக்கு ஆபீஸ் வந்திடு. ரொம்ப சீக்கிரம் வந்துடாதே. நா இருக்க மாட்டேன்.
மணி - எதாச்சும் வெளியூர் போறீங்களா சார்.
ராகவன் -பொண்டாட்டியை இட்டுனு ஊட்டிக்கு போறேன், நீயும் வரியா.
மணி- சரி சார், உங்க மனைவி தப்பா நினைக்க மாட்டாங்களா சார்.
ராகவன் - அடி செருப்பால நாயே, மரியாதையா சொன்ன மாதிரி நாளைக்கி வாடா.
மணி- ராகவன், எனக்கு சாராயம் காச்சறது தவிர வேற எதுவும் தெரியாது. ஆனா நீ அதுக்கும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டு இருக்கே. உன்னை போடறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. டேய் கதவை சாத்துங்கடா. என்று கோபமாக கத்தினான்
ராகவன் - என்னடா அசிங்கமா பேசிட்டே. நான் என்ன உன் பொண்டாட்டியா நினைச்ச பொழுதெல்லாம் போடறதுக்கு. அப்புறம் உனக்கு வேற தொழில் தெரியாதா. நாயே ஆரம்பத்துல பிட் பாக்கெட் அடிச்சிகிட்டு இருந்தே, அப்புறம் கொஞ்ச பொண்ணுகள வெச்சி விபசாரம் பண்ணிக்கிட்டு இருந்தே,
மணி - பொண்ணுங்கள வெச்சி தான் சார் விபசாரம் பண்ண முடியும்,,,,
ராகவன் - என்ன நக்கலா.... இப்ப இன்னாடான வேற தொழில் தெரியாதுன்னு சொல்றே.
மணி - ராகவன், நான் ரொம்ப ஆழமா இறங்கிட்டேன்.
ராகவன் - இறங்கினா ஏறி வாடா .
மணி - இப்ப நான் என்ன பண்ணனும்.
ராகவன் - மரியாதையா , நீ காச்சுற சாராயத்துல முதல் கேன் எனக்கு வரணும். இந்த டீல் சரினா நான் இங்கிருந்து போயிடுவேன்.
மணி - சரி சார்.
ராகவன் - அப்புறம் ரெண்டாவதா வரும்போது வேகமா கதவை உதைச்சதுல கட்ட விரலு அடிபட்டுடிச்சின்னு சொன்னேனில்ல அதுக்கு கட்டு போடணும். ஒரு முப்பது ரூபா இருந்தா ராயப்பேட்டை ஆஸ்பித்திரி போவேன்.....
மணி - ??????????
30 July 2009
வேட்டையாடு விளையாடு ( லொள்ளு )
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒரு இடத்துல ஆபாசமா இருக்கு..
மத்தபடி ரசிச்சு சிரித்தேன்!
Post a Comment