இறுதியில் கூட்டணி பிரச்சினை முடிந்து தொகுதிகள் பங்கீடும் முடிந்து தேர்தல் நாளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம் அரசியல் வாதிகள். எந்த காட்சியில் இருந்து எங்கு மாறுகிறோம், நம் கொள்கைகளுக்கு அவர்கள் கொள்கைகள் ஒத்து போகிறதா என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. யாரேனும் இந்த கேள்வியை கேட்டாள் கூட இது அரசியலுக்கான கூட்டணி என்று சர்வ சாதாரணமாக சொல்லி விடுவார்கள். சொல்லிவிட்டு கேள்வி கேட்டவரை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விடுவார்கள். கூட்டணிக்காக எத்தனை படிகள் இறங்கும் செயல்களையும் செய்ய துணிவார்கள் இந்த அரசியல் வாதிகள் . முன்பு சாராயம் குடுத்து ஓட்டை வாங்கினார்கள். இப்போது பத்தாயிரம் குடுத்து கூட ஓட்டை வாங்க துணிந்து விட்டார்கள். பத்தாயிரம் வருகிறதே என்று பணம் வாங்கி கொண்டு ஓட்டை போடாதீர். அந்த பணம் நம் பணம் தான். நம் வரி பணம். சமுதாய வளச்சிக்காக நாம் கட்டும் வரிப்பணம். அதை கோடி கணக்கில் சூறையாடி நம் கையில் ஆயிரங்களில் வைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள் . இது அவர்கள் இன்னும் கோடி கோடி யை சூறை ஆட போடும் முதல் . இம்முறை ஏமாறாதீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லி கொண்டு போகலாம். மொத்தத்தில் இவர்களை பிடிக்க வில்லை. மாற்றம் வேண்டும். நம் கோபத்தை காட்ட வேண்டும் .
இவர்களை என்ன செய்வது என்று கேட்க்கிறீர்களா, ஒட்டு போடாமல் இருப்பதா. அப்படி செய்தால் நம் ஓட்டை இறுதி நேரத்தில் வேறொருவர் போட்டு விடுவார். பிறகு என்ன செய்வது. அதற்கும் வழி இருக்கிறது என்று ஞானி அவர்களின் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். அது 49 ' ஒ '. நாம் நம் ஓட்டை இதற்க்கு பதிவு செய்யும் வாய்ப்பு. அதாவது போட்டி இடும் எந்த கட்சிக்கும் ஒட்டு போட விருப்பம் இல்லை என்ற ஒரு நம் கருத்து. இம்முறை 49 ' ஒ " க்கே என் ஓட்டை போட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என் நண்பர்களுக்கும் சொல்லி கொண்டு இருக்கிறேன். உங்களுக்கும் ஒட்டு போட விருப்பமில்லையா நீங்களும் உங்கள் ஓட்டை இதற்கே பதிவு செய்யுங்கள் . உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
ஓட்டை போட விரும்பாத பதிவுகள் எழுதும் ஒவ்வொருவரும் ஒரு பதிவாக இந்த 49' ஒ" வை பற்றி ஒரு பதிவு எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு க்கொள்கிறேன்.
12 April 2009
போடுங்கையா ஒட்டு 49 ' ஒ' வை கேட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment