28 April 2009

சாருவும் அவர் ஜால்ராக்களும்

கடந்த சில வாரங்களாக சாரு வளைத்தளத்தில் கமலை பற்றி கார சாரமாக சில புத்திசாலிகள் விவாதம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். வாரம் இரண்டு பேர் கமலை பற்றி , தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் செய்ய வில்லை என்றும், அவருக்கு நடிக்கவே தெரியாதென்றும் எழுதி அனுப்புவார். அதற்க்கு சாறு விளக்கம் சொல்வார். பெரும்பாலும் வாசகர்கள் சொல்லும் கருத்துக்கு சாரு ஆமாம் போட்டு விடுவார். எப்போதாவது ஒரு முறை இல்லை என்று பதில் சொல்வார்.

இங்கே விளம்பரம் தேடும் வாசகர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள். கமல் ஒரு சிறந்த நடிகர் என்று அவரே சொல்லிக்கொள்கிறார். உண்மையில் அவர் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்க வில்லை. அவருக்கு உலகநாயகன் பட்டம் தகுதிக்கு மீறிய ஒன்று என்றும், அவருக்கு தலைக்கனம் பிறரை மதிக்க தெரியாதவர் என்றும், ஜால்ரக்கலைதான் அவருக்கு பிடிக்கும் என்றும், அவர் இன்னும் ஒரு நல்ல படம் தரவில்லை என்றும், தான் தான் பெரிய அறிவாளி என்று கமல் காட்டிக்கொள்ளும் ஒருவர் என்றும், இன்னும் வேறு சில குற்றச்சாட்டுக்களை கமல் மேல் வைத்து வாசகர்கள் எழுதும் கடிதங்களுக்கு சாறு பெரும்பாலும் அவர்களுடன் ஒத்து பொய் விடுகிறார். சாரு நிவேதிதாவிற்கு ஜால்ரா போடுவதற்காகவே இத்தகைய கடிதங்களை எழுதுபவர்கள் இவர்கள். சாருவின் இணையதளத்தில் தங்கள் கடிதங்கள் வருவதற்காகவே நீங்கள் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் நண்பரே. இதற்க்கு பெயரும் ஜால்ரா தான்.


அதில் ஒரு வாசகன் இப்படி எழுதி இருக்கிறார். ஆர்குட்டில் கமல் கம்முநிடியில் சென்றாராம் அங்கே அவர்கள் கமலை ஆண்டவர் என்று எழுதுவதை பார்த்து இவருக்கு வாந்தி வந்ததாம். ஏன் நண்பரே நீர் என்ன முளுகாமலா இருந்தீர் அந்த நேரம். கமல் ஒரு உலக சினிமா கூட நடிக்கவில்லையாம். அவருக்கு உழக நாயகன் பட்டம் அதிகமாம். அவர் அறிவாளி என்று எப்பொழுதுமே காட்டிக்கொண்டு இருப்பாராம். நீர் என்ன செய்தீர். கமலுக்கு உழக நாயகன் பட்டம் அதிகம் என்று சொல்லி அதற்க்கு ஐந்து காரங்கள் வேறு கண்டு பிடித்து எழுதினீர்களே. இப்பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள். ஒருவரை இழிவு படுத்த மூளையை கசக்கி நான் ஒரு புத்திசாலி என்று காட்டிக்கொள்ள புள்ளி விவரம் எழுதிநீரே இதை என்ன சொல்வது. இப்படி உங்கள் திறமையை சாருவின் வளைத்தளத்தில் காட்டிக்கொண்டதற்கு உங்களை நினைத்தால் எங்களுக்கு கூடதான் வருகிறது வாந்தி. இங்கே நீங்கள் உங்களை அறிவாளி என்று காட்டிக்கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர் ஒரு முறை யோசித்து பாரும். உலக சினிமாவை நீங்கள் கரைத்து குடித்து இருக்கிறீரோ. அதிகம் குடித்து இருப்பீர்கள் போல அதுதான் உங்களுக்கு அடிக்கடி வாந்தி வருகிறது.


ஒரு அறிவாளி தன்னை அறிவாளி என்று சொன்னால் நம் நாட்டில் ஒருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதாரணம் நம் பாரதி தான் . மேற்கு வங்கத்தில் எழுத்தாளர்களுக்கான விருதை அப்போது ரபீந்திர நாத் தாகூர் கு முதல் முறையாக தந்தார்கள் . அப்போது நம் பாரதி இங்கே பொங்கி எழுந்தார். எப்படி அவருக்கு தரலாம். அவரை விட நான் தானே சிறந்தவன். எங்கே அவரை என்னோடு போட்டி போட்டு ஜெயித்து அந்த விருதை வாங்கிக்கொள்ளட்டும் பார்க்கலாம் என்று. இதற்க்கு பெயர் கர்வம் அல்ல. அது தன் மீதும் தன் திறமையின் மீதும் உள்ள நம்பிக்கை. ஆனால் அன்று இப்படித்தான் அவரை தூற்றினார்கள். ஆனால் இப்பொழுது அவர் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
இப்படி பாரதி பேச காரணம் தன் புலமையின் மேல் தனக்கு உள்ள ஆற்றல்.


மற்றொன்று , கமல் உழக தரம் வாய்ந்த சினிமா நடிக்க வில்லை என்று இவர்கள் விவாதம். இவர்களுக்கு பிடிக்க வேண்டுமாம். படத்தை அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து பார்த்து இது நல்ல படம் , இது கெட்ட என்று சொல்லும் கூட்டத்தின் சதவிகிதம் இங்கே குறைவு. அவர்களுக்கு பிடித்த படம் எடுத்தால் இங்கே அடுத்த படம் எடுக்க அந்த நடிகன் இருக்கமாட்டான். இங்கே மூன்று வேலை சோறு கிடைக்காத மக்களே அதிகம். அவர்கள் நீங்கள் பார்ப்பது போல் சினிமாவை பார்ப்பதில்லை. அவர்களுக்கும் சினிமா புரிய வேண்டும் நண்பர்களே. திரை அரங்குகளில் பால்க்கனியில் அமர்ந்து பார்க்கும் உங்களை விட , கீழே அமர்ந்து பார்க்கும் மக்கள் கூட்டம் இங்கே அதிகம். இங்கே யாரும் படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரை அருகக் இயலாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் ஏற்று கொள்கிறோம். நீர் உழக சினிமா பார்க்கிறீர் அது நீர் எடுக்க சொல்கிறீர். இங்கே மக்கள் யாரும் வீட்டில் மல்லாந்து கொண்டு கம்ப்யூட்டரில் உழக சினிமா போட்டு பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பவர் சதவிகிதம் மிக மிக குறைவு.

இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. நீங்கள் உங்கள் வசதிக்கேற்றார் போல் பேசுவதை முதலில் நிறுத்தினால் எல்லோருக்கும் நன்று.

சில பேர் ஜெயித்து பேர் வாங்குவார்கள். சில பேர் அவர்களை சீண்டியே பேர் வாங்குவார்கள். நீங்கள் இதில் எந்த வகை என்று யோசித்து பாருங்கள்.

3 comments:

SUBBU said...

தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்னே :)))))))))))

Suresh said...

aaha patiya kilapitingale

கடைக்குட்டி said...

தல அவிங்களயெல்லாம் மனுசய்ங்களா மதிச்சு ...

போங்க தல.. வேற ஏதாவது எழுதுங்க..

Post a Comment