சில வருடங்களுக்கு முன் மிகவும் பரபரப்பு ஏற்ப்படுத்திய ஒரு பிரச்சினை ராமர் பாலம் . சேது சமுத்திர திட்டத்தை தொடர விடாமல் செய்த பிரச்சினை. பிரச்சினைக்கு காரணம் அங்கே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுவது. வடநாட்டு சாதுக்கள், சாமியார்கள், சாதுக்களால் பதவியை பிடித்த அரசியல் கட்சிகள் அங்கே ராமர், பாலம் கட்டிய இடம் என்றும் அங்கே எந்த தூர்வாரளும் நடக்ககூடாது என்றும் சேது சமுத்திர திட்டத்தை செய்ய விடாமல் தடுத்தனர். பிறகு அந்த பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று இறுதியில் அங்கே எந்த பாலமும் இல்லையென்றும் சேது சமுத்திர திட்டத்தை தொடரலாம் என்று நீதிபதிகள் அறிவித்தும் அந்த சாதுக்கள், சில அரசியல் கட்சிகள் அதை ஏற்காமல் பெரும் பிரச்சினை செய்தது அனைவருக்கும் தெரியும். ராமர் கட்டியதாக சொல்லப்படும் அந்த பாலம் ஒரு வேலை உன்மை என்று வைத்துக்கொள்வோம். அப்படி உன்மையாகவே ராமர் பாலம் கட்டியிருந்தால் வியாசர் சொன்ன ராமாயணப்படி ஒரு அடிப்படை ( லாஜிக் ) கேள்வி ஒன்று எழுகிறது. இங்கே நான் சொல்லப்போகும் அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி தான் இந்த பதிவு. அந்த அடிப்படை கேள்விக்கு போவதற்கு முன் ராமர் எதற்காக, யாரை எல்லாம் வைத்து ராமர் பாலம் கட்டினார் என்று பார்ப்போம்.
வியாசர் சொன்ன கதைப்படி ராவனாசுரன் , சீதையை கடத்திக்கொண்டு இலங்கைக்கு செல்கிறான். ராமர் சீதையை விடுவிக்க வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருகிறார். இங்கே நம் முன்னோர்களெல்லாம் குரங்கு மனிதர்களாக இருக்கிறோம். இதை நான் சொல்ல வில்லை, ராமாயணத்தில் அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே வந்து அனுமார் உதவியுடன் பெரும் படை திரட்டுகிறார் ராமர். இறுதியாக இங்கிருந்து இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க முடிவு செய்கிறார்.
பாலம் கட்டுவதற்கு முன்னாள் அந்த பெரும் படையில் ஒருவரை பற்றி இங்கே சொல்லவேண்டும். அவரும் ஒரு குரங்கு மனிதன். அவர் சிறு வயதில் வீட்டில் இருக்கும் அணைத்து பொருள்களையும் கொண்டு சென்று கடலில் போட்டுவிடுவான். இதனால் அவர் தந்தை அவனுக்கு ஒரு சாபம் தருகிறார். அது என்னவென்றால் அவன் இனி எதை நீரில் போட்டாலும் அது மூல்கக்கூடது என்பது. அதாவது அவன் எதை கடலில் போட்டாலும் அது மிதக்கவேண்டும். மூல்கக்கூடாது. இவரைத்தான் ராமர், பாலம் கட்டுவதற்கு உபயோகபடுத்துகிறார். அதாவது முதல் கல்லை தண்ணீரில் போடுவார். அது மிதக்கும். பின் அதில் ஏறிக்கொள்வார், அடுத்த கல்லை போடுவார் அதுவும் மிதக்கும். இப்போது அவர் இரண்டாவது கல்லின் மேல் ஏறிக்கொள்வார். பின்னால் வருபவர் முதல் கல்லில் ஏறிக்கொள்வார்கள். அதன் பிறகு மூன்றாவது கல்லை போட்டு இவர் அதில் ஏறிக்கொள்வார். இப்படியாக இலங்கைக்கு சென்றதாக கதை. இது எங்களுக்கு தெரியுமே நீ என்ன சொல்ல வந்தாய் அதை சொல்லிதொலை என்கிறீர்களா. பொறுமை கோபப்படாதீர்கள்.
ராமர் பாலம் கடலுக்கு அடியில் உள்ளது என்றும், அதனால் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் சாதுக்கள், சாமியார்கள், சில அரசியல் கட்சிகள் பிரச்சினை செய்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று நாசா எடுத்த புகைப்படத்தில் ராமர் பாலம் தெரிந்ததேன்றும் சொன்னார்கள்.
இப்போது அந்த அடிப்படை (லாஜிக் ) கேள்வி. ராமர் உண்மையாக பாலம் கட்டியிருந்தால் அந்த பாலம் இப்போதும் கடலுக்கு மேல் இருந்து இருக்கவேண்டும் . ஏன் என்றால் , பாலம் கட்ட ஒவ்வொரு கல்லையும் போட்டவருக்கு அதுதானே சாபம். அவர் எந்த பொருளை போட்டாலும் அது கண்டிப்பாக மிதக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் மூல்கக்கூடாது. இதுதான் நான் சொன்ன அந்த அடிப்படை ( லாஜிக் ) கேள்வி. இதற்க்கு உங்களுக்கு விடை தெரிந்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
இல்லை, பாலம் உள்ளே சென்றதற்கு வியாசருக்கு தெரியாத வேறு ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லும் சாமியார்களும், சாதுக்களும் அந்த கதையை அவிழ்த்துவிடவும்.
27 July 2010
ராமர் பாலம் அடிப்படை கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு பக்கத்துலையே உக்காந்துக்கோ ராசா.
இராமாயணம் என்றே ஒன்று இல்லை என்கிறோம். பலத்தை பற்றி கேக்குறீங்க detail'லு ..
nee enna than mukkunalum adhu poithan...
Scientist sollitanga.. ever ramer vanthu kattunadu normal bridge illa.. floating bridge..with toll
i think basically u r not a hindu and also u never read ramayana so only u gossips some lie here. u must know one thing there r so many proofs for ramar and ramayanam. that bridge was constructed by ramar and vanarasena this is true thing. the brdige was clearly on the above sea level till 14th century that time cyclone formed and destroyed all things and bridges too.this is not tell by without any proof. proofs gave by vasco da gama ,marcopolo and some other foregn travellers wrote about that bridge was connected india and lanka,
MUSLIM URUVAMILLAMAL KADAVULAI VANANGUKIRARKAL ATHAI POLATHAN RAMAR
Post a Comment