நேற்று பாகிஸ்தானில் விமான விபத்தில் 150 க்கும் மேற்ப்பட்டோர் மரணம் அடைந்தனர்.
இப்பெல்லாம் விமானத்துல ஏறி வேறு ஒரு இடத்துல இறங்குறது கிட்ட தட்ட நம்ம ஊரு அரசு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி உயிரோட திரும்பி வற்ற அளவுக்கு ஆயிடிச்சி. இடையிலே எப்போ வேணுமுன்னாலும் நம்ம உயிர் போயிடலாம். எனக்கென்னவோ இப்பெல்லாம் விமானம் கற்று குடுக்குற ஆளுங்க எல்லாம் இதுக்கு முன்னாடி லாரி டிரைவரா இருந்து இருப்பானுகலோனு தோணுது. சீரியசா சொல்லணுமுன்னா விமாமன் ஓட்டுற ஒவ்வொருத்தரையும் விமானம் ஓட்ட போகும் முன்னாடி மன அழுத்தம் இருக்குதான்னு செக் பண்ணிட்டு அப்புறம் அவங்களை விமானம் ஓட்டசொல்லனும். எதுக்குன்னா, காதல் தோல்வியாகி இருக்கலாம், மனைவியோட கள்ள உறவு தெரிஞ்சி இருக்கலாம், குடும்பத்துல பெரிய சண்டை வந்து இருக்கலாம், எதாச்சும் பெரிய அவமானம் நடந்து இருக்கலாம், அதை யோசிசிகிட்டே அந்த விமானி வண்டி ஒட்டி இடையில எப்பவாச்சும் அவர் தற்கொலை முடிவு செஞ்சி விமானத்தை எங்கயாச்சும் இடிக்கலாம். அதனால அவர் மட்டுமில்லாம அப்பாவி ஜனங்களும் இறந்து போயிடறாங்க. அதான் சொன்னேன் மன அழுத டெஸ்ட் செஞ்சி விமானம் ஓட்ட வைக்கணும். ( எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாலும் விமானத்துல ஏற கூடாது. இங்கிருந்து காஷ்மீர் போனாலும் சைக்கிள் லேயே போயிடனும்.)
விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்தால் எதிர் கட்சியினர் இன்று சட்ட மன்றத்திற்கு வெளியில் அமர்ந்து எதிப்பை காட்டுகின்றனர்.
எதிர் கட்சி மட்டும் இல்லாம, ஆளும் கட்சி மந்திரிகளும் வெளியில உட்க்கார்ந்து உங்க குப்ப சண்டையை போட்டு கிட்டீங்கனா, சட்ட மன்றத்துக்கு உள்ள மொத்த மின்சாரம் மிச்சம். ஒவ்வொரு நாளும் சட்ட மன்றம் கூடும் போது சில கொடிகள் அரசுக்கு இழப்பு. உங்களால எதுவும் மக்களுக்கு உபயோகம் இல்லை. வெளியில உட்க்கார்ந்து மின்சாரம் ஆச்சும் மக்களுக்கு மிச்ச படுத்துங்க.
தொடர்ந்து முரளிதரன் பந்து வீசும் முறையை விமர்சித்து வரும் பிஷேன் சிங் பேடிக்கு பதில் சொல்லி இருக்கிறார் முரளிதரன். பிஷன் சிங் பேடி ஒரு சாதாரண பௌலர் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பந்து வீசி நிறைய விக்கெட் எடுத்து பேரு வாங்குறவங்க முதல் ரகம் . ஆனா அப்படிபட்டவங்களை விமர்சித்தே பேரு வாங்குறவங்க ரெண்டாவது ரகம். பிஷன் சிங்க் பேடி ரெண்டாவது ரகம் அப்படின்னு சத்தியமா நான் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்கு தேவையில்லாத வம்பு.
டெல்லி விமான நிலையத்தில் ராடார் வேலை செய்யாததால் சிறிது விமானங்கள் புறப்படுவதில், இறங்குவதில் தாமதமானது.
விமானம் ஒட்டுரவனாலதான் பிரச்சினைன்னு நினைச்சா இது வேறயாடா. உலகத்துல இருக்குற மொத்த ஜனத்தொகையை குரைக்கிற முக்கியமான வேலையை மொத்தமா விமானம் ஓட்டுறவங்க அப்புறம் அதுக்கு சம்பந்தபட்டவங்க குத்தகைக்கு எடுத்துகிட்டா போல இருக்கு . ( நடத்துங்கடா, நடத்துங்க )
29 July 2010
சுட்ட செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment