13 November 2008

பஞ்ச் வசனங்கள்

"நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை."

வழிப்போக்கன்- யார் சார் அந்த நாலு பேரு ? ( மிக ஆழ மாக யோசித்து சொன்னார்)

நான்
என் மனைவி
என் மகன்
என் மகள்.

வழிப்போக்கன் - அப்போ நாலு பேருன்னு சொன்னது உங்க குடும்பத்துல நாலு பேரா?

" ஆமா, நாலு பேரு. நான், என் மனைவி, என் பொண்ணு, என் பையன், கரெக்டா நாலு கணக்கு வருதே.


" தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை " மன்னிப்பு"

வழிப்போக்கன் - அப்போ தெலுங்குல சார் ?

" நாகு தெலுங்கு தெலியதண்டி "

வழிப்போக்கன் - தெலுங்கு தெரியாதுன்னு தெலுங்கு மொழியிலயே சொல்லிட்டீங்க சார் .

" ஏய் " ( சத்தமாக)

வழிப்போக்கன் - என்னை மன்னிச்சிடுங்க சார் ?

" சரி மன்னிச்சிட்டேன். அப்பறம் நான் தெலுங்குல பேசினதை வெளியில சொல்லிடாதே.


" நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்க்கமாட்டேன்.


வழிப்போக்கன் - என்ன முடிவு பண்ணிட்டீங்கன்னா, நீங்க பேச்சை மாத்திக்க மாட்டீங்க ?

" நாலு குத்துப்பாட்டு, ஆறு சண்டை , பத்து பஞ்ச் டயலாக் இல்லேன்னா "

வழிப்போக்கன் - இதுலையே படம் முடிஞ்சி போயிடுமே சார், அப்போ கதை எங்கே சொல்லுவீங்க ?

" அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு பஞ்ச் டயலாக் வேணும் "

வழிப்போக்கன் - அப்பறம் சார் ?

" படம் கண்டிப்பா நூறு நாள் ஒட்டியே ஆகணும் .

வழிப்போக்கன் - படம் நல்ல இல்லன்ன கூடவா?

" அதெல்லாம் எனக்கு தெரியாது "

வழிப்போக்கன் - இன்னும் எதாச்சும்?

" சம்பளத்துல பத்துக்காசு குறைஞ்சாலும் வாங்கமாட்டேன்"

வழிப்போக்கன் - படம் சரியா இல்லேன்னா, நஷ்டம் வந்தா கொஞ்சம் குறைசிக்குவீங்களா ?

" அதெல்லாம் எனக்கு தெரியாது "

வழிப்போக்கன் - உங்களுக்கு என்னதான் சார் தெரியும் ?

" அதெல்லாம் எனக்கு தெரியாது.





















1 comment:

Post a Comment