இருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள் என்றும் வேறு வீடு பார்த்து குடியேற தனக்கு பொருளாதாரம் வலுவாக இல்லாத காரணத்தால் அவர் தன் இணைய தள வாசகர்களிடம் பணம் தந்தருளவேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார். . இந்நிலையில் யாரும் பணம் அனுப்பாதா காரணத்தால் பணம் வந்து, என் பிரச்சினை தீரும் வரை இணைய தளத்தில் எழுதுவதில்லை என்று சொல்லி விட்டார். மிக சிறந்த எழுத்தாளர், மிக சிறந்த சிந்தனையாளர், மிகவும் முற்ப்போக்கு சிந்தனை உடையவர். இணையதள எழுத்தாளர்களில் அதிக வாசகர்களை உள்ளவர். தன் பிரச்சினையை சொல்லியும் யாரும் அவருக்கு பணம் அனுப்பவில்லை என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து பார்த்தேன். அதில் என் அறிவுக்கு எட்டிய வரையில் இரண்டு முக்கிய காரணங்கள் .
ஒன்று - ஆயிரம் ரூபாய் அனுப்பினால், பிச்சைக்காரன் வெறும் ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கிறான் பாரு. ஆயிர ரூபா எப்படியா பத்தும் என்று திட்டுவார். பத்தாயிரம் ரூபாய் அனுப்பினால், பத்தாயிரம் ரூபாய் அனுப்பினால் மிச்சம் இருக்கிற நாற்பது ஆயிரம் ரூபாய் எவன் அனுப்புவான் என்று திட்டுவார். சரி என்று நாற்ப்பத்தி ஒன்பதாயிரத்தி தொள்ளாயிரத்தி ஐன்பது அனுப்பினால், அவன் பாக்கெட் ல ஐன்பது ரூபா இல்லை என்று திட்டுவார் என்று வாசகர்கள் நினைத்து இருக்கலாம்.
இரண்டாவது - இவர் என்ன எழுதிவிட போகிறார் இரவு தூங்கியது, பல் துலக்கியது, பெண்களை சந்தித்து, காதலித்தது, கசமுசா செய்தது. இவரு கதை எல்லாம் நமக்கு எதுக்கு. இதுக்கு இவரு எழுதாமலே இருக்கலாம் என்று வாசகர்கள் நினைத்திருக்கலாம்.
அப்படி நினைத்திருக்கும் பட்சத்தில், இப்படி ஒரு எழுத்தாளன் மேல் எதற்கு இத்தனை கோவம் இந்த வாரகர்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) என்று யோசித்து பார்த்தால் எனக்கு தட்டுப்பட்ட இரண்டு காரணங்கள்.
ஒன்று - அவர் தன் மனதில் பட்டதை எல்லாம் சொல்லி விடுகிறார். உண்மையில் இது தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஒரு அழகான பெண்ணை பார்க்கிறோம். உடனே நம் மனதில் ஒன்று தோன்றும், அது இந்த பெண் நம்ம வீட்டு பக்கத்துல இருந்து இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றும். இதை நாம் வெளியில் சொல்லுவதில்லை. அவர் சொல்லி விடுகிறார். அதை அந்த பெண் காது படவே சொல்லி விடுகிறார். அங்கே தான் வருகிறது வம்பு.
இரண்டாவது - அவர் பாலுணர்வு பற்றி அதிகம் எழுதுவாதாலும் கூட இருக்கலாம். இதில் நம் மக்களுக்கு விழிப்பு வர வைக்க வேண்டும் என்று எழுதுவதாக நான் கருதுகிறேன். இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் நான் அவருடன் ஒற்று போகிறேன்.
இறுதியாக, எது எப்படி இருந்தாலும் அவர் சரளமாக, எளிமையாக எழுதும் எழுத்துக்களுக்கு நான் எப்போதும் வாசகன் தான்.
( நீ இதெல்லாம் எழுதி ஒரு பிரயோஜனமும் இல்லை முடிஞ்சா பணம் அனுப்பு இல்லன்னா மூடிகிட்டு போட என்று சொல்லாதிங்க சார் )
15 November 2008
பணம் அனுப்பும் வரை எழுதுவதில்லை - ஜாரு நிவேதிதா
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
anne kadaisi yarunu kanudu pudichitten.athu.....athu anne itha nan porathinala enaku entha prachanayum varathu thane....athu vanthu...surukama sonna 5 eluthu muthal eluthu s...u,
Post a Comment