20 November 2008

யார்ரா இங்கே தமிழ் ?

ஒரு டீ கடையில் தன் நண்பர்களுடன் டீ குடித்துக்கொண்டு இருந்தான் தமிழ். சட்டென்று தொலை பேசி அழைத்ததும் பேசி கொண்டே வெளியில் நின்றிருந்தான். அப்போது நாலு தடியர்கள் வந்து தமிழ் நண்பனை பிடித்து யார்ரா இங்கே தமிழ் என்று மிரட்டிய வாறே கேட்டு கொண்டு இருந்தான். அதற்குள் தமிழ் அருகில் வந்து அவன் முதுகை தட்டியதும் அவன் திரும்பினான். அவன் திரும்பியதும் தன் இரண்டு கைகளை மேலே தூக்கினான் தன் அக்குள் தெரியும் படி. அக்குளில் இருந்து வந்த வாடையால் அவன் தன் மூக்கை மூடி கொண்டான். இப்போது வசனம்.

" யாரு பக்கத்துல வந்து நின்னா சின்ன பசங்கள்ள இருந்து வயசான பாட்டிவரைக்கும் கப்புனு மூக்குல வெரலை வெக்கரான்களோ அவன் தான் தமிழ். அது நான் தான். "

" அதுக்கு ஏன்டா அக்குல தூக்கி காட்டுற. எத்தன நாளாச்சி நீ குளிச்சி. "

" போன மாசம் தாண்டா குளிச்சேன். "

" இன்னாது போன மாசம் தான் குளிச்சியா. ஐயோ, உன்னை வண்டியில எத்திகினு அவ்வளவு தூரம் வேற போகனுமா. இன்னிக்கி என் உசுருக்கு உத்தரவாதம் இல்லை. சரி மறுபடியும் கேக்கறேன். நீ தானே தமிழ்.

சட்டென்று தன் கைகளை மேலே தூக்க முயற்சிக்கிறான் தமிழ்.

" வேணாண்டா சாமி உன்னோட அக்குள் நாத்தம் கூட சமாளிச்சிக்கலாம். ஆனால் , அதுக்கு அப்பறம் நீ பேசுற அந்த பஞ்ச் வசனம்தான் தாங்க முடியலை. உன் காலில் வேணுமுன்னா கூட விழறேன். நீ அமைதியா வந்த போதும்.

" அது என்று தன் காலரில் இருந்த சிகரெட்டை வாயால் கவ்வி, நடக்க ஆரம்பிக்கறான்.

****************************


ஒரு கிராமத்தில், ஒரு குடிசையில் இருவர் பேசி கொண்டு இருந்தனர். ஒருவர் மயிலு. மற்றொருவர் சப்பாணி.

" மயிலு , ஆத்தா ஆடு வளர்த்திச்சீ, கோழி வளர்த்திச்சீ ஏன் மாடு கூடவளர்த்திச்சீ
ஆனா நாய மட்டும் வளர்க்கலை........"

"அதனால தான் மூணு பேரு சோறு போட்டு உன்னை வளர்த்திச்சீ . எஸ்கேப் ஆகலாமுன்னு நினைக்கிற போல இருக்கு. தப்பிக்க முடியாது ஜாக்கிரதை.


*****************************

தங்கச்சி வீட்டை விட்டு ஓடி போக முயற்சி செய்ய , அதை இந்த தாடி கார அண்ணன் பார்த்து விடுகிறார்.

" தங்கச்சி நீ சின்ன வயசுல எனக்கு தெரியாம முட்டாய் வாங்க போனே, அது அறியா வயசுன்னு நினைச்சேன். பதிமூணு வயசுல யாரோ ஒரு பையன் கூட பீச்சில ஜாலியா இருந்துட்டு வந்தே அது பருவ வயசுன்னு நெனைச்சேன். ஆனா இப்போ அண்ணனுக்கு தெரியாம வீட்ட உட்டு போறியே இது என்னமா நியாயம்.

உன் கையில நான் போட்டேன் தங்க காப்பு
நீ எனக்கு வெச்சது பின்னால ஆப்பு
நீ சொல்லாம போறது பெரிய தப்பு.

டண்டனக்க, ஏய் டணக்கணக்கா.

" பின்ன ஓடாம நீ இப்படி பேசினா மனிசன் இருப்பானா இந்த வீட்டுல.

" கேவலம் பால் காரன் பரம சிவம் கூடவா ஓடுவே. "

"நீ பேசுற அடுக்கு மொழிக்கு, வேற எவளாச்சும் இருந்தா பிச்சை காரனை இட்டுகுனே ஓடியிருப்பா. போற உசுரு அவன் கிட்டயே போகலாம். உன் கிட்ட போகறதுக்கு. நவுந்து நில்லுய அப்படி.

2 comments:

வால்பையன் said...

:)

சரியான லொள்ளு தான் உங்களுக்கு

மன்மதக்குஞ்சு said...

சிரிப்பு வருது... சிரிப்பு வருது
மேலும் சிரிப்புக்கும் நீங்கள் அடிக்கவும்
http://sankarlal55.blogspot.com/2008/12/blog-post.html

Post a Comment