டிவி போட்டாலே முதல்லே விளம்பரம்தான் பார்க்க முடிகிறது. அப்பறம் தான் அதுல போயிகிட்டு இருக்கிற நிகழ்ச்சி நாடகமா அல்லது படமான்னு தெரியுது. பார்த்துகிட்டு இருக்கும்போது ஒரு விளம்பரம் பார்த்தேன். அட இதுக்கெல்லாமா விளம்பரம். இதை கூட வாங்கி உபயோகிக்கரான்களா அப்படின்னு தோணிச்சு. இதை எந்த மாதிரியான ஆளுங்க வாங்குவாங்கன்னு தோணிச்சு.
அது என்ன விளம்பரம் பார்த்தா, அக்குல்ல வியர்வை வராம இருககுரதுக்கான டியோடரண்ட் . இதுல நடிச்சது தமிழ் சினிமாவுல பெரிய நடிகையா இருந்து இப்போ ஹிந்திக்கு போனவங்க. அக்குள்லே வேர்த்து வருதுன்னு கவலைப்பட்டு யாருடா இதை வாங்குறாங்கன்னு நினைச்சேன்.
அடித்தட்டு மக்களுக்கு சோறே பெரும் பிரச்சினையா இருக்கும் போது கண்டிப்பா அக்குல்ல வேர்க்குதுன்னு யாரும் கவலை பட்டு அரிசிக்கு பதிலா காசு குடுத்து டியோடோரன்ட் வாங்கி அக்குல்ல தடவிக்க மாட்டாங்க. அப்புறம் நடுத்தர மக்கள், ஆம்பளைங்க காசு மிச்சம் பிடிக்க சவரமே மாசத்துக்கு ஒருவாட்டி செஞ்சிக்கராணுக. எங்கிருந்து
அக்குல்ல வேர்க்குதுன்னு காசு செலவு பண்ணுவாங்க. நடுத்தர வர்க்க பொம்பளைங்க வீட்டு வேலை செய்யணும். என்னதான் பாட்டில், பாட்டில், அக்குள் டியோடோரன்ட் அடிச்சிகிட்டு சமையல் அறைக்கு போனா வேர்த்து ஊத்தத்தான் செய்யும். அப்போ இது நடுத்தர வர்க்கம் உபயோகிக்க முடியாதுன்னு தோணுது.
கடைசியா பணக்காரங்க , அவங்க வீட்டுல இருக்குற கார் ல இருந்து கக்கூஸ் வரைக்கும் ஏ சி இருக்கும். பொழுதுக்கும் ஏ சி ல இருந்த என்ன இதுக்கு வேர்க்கும். அவங்க வெளியில போனாகூட ஏ சி இருக்குற இடத்துக்கு தான் போவாங்க. அப்போ அவங்களுக்கு வேர்த்து ஊத்த வாய்ப்பே இல்லை. அப்போ இதை யாருதான் பயன் படுத்துறாங்க. எனக்கு தெரியலை. ஒரு வேலை உங்களுக்கு தெரிஞ்சி இருந்தா எனக்கு சொல்லுங்க.
எனக்கு என்னவோ எதிர்காலத்துல விபரீதமான விளம்பரம் எல்லாம் வரும்ன்னு தோணுது. உதாரணதுக்கு, ஆயி போற இடத்துல வாசனை வராம இருக்குற டியோடோரன்ட். அதுல நடிக்க ஹிந்தியில இருந்து பெரிய நடிகை வரலாம். ரொம்ப ஆசைப்படாதீங்க. எப்படி தடவறது எல்லாம் காட்டமாட்டாங்க. அதுக்கெல்லாம் பொம்மையோ, இல்லைன்னா கிராபிக்ஸ் உபயோகபடுத்துவாங்க.
1 comment:
The ad film you have mentioned is DISGUSTING, at the same time, your imagination on the concept is ..............(your idea makes the ad decent)
Post a Comment