4 August 2010

லொள்ளு - திருவளையாடல்

இதனால் ஊர் மக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் நேற்று நம் மன்னர் அந்தப்புரத்தில் ராணியுடன் ஜாலியாக இருக்கும் போது தெரியாமல் ராணியின் கூந்தலை வாசனை பார்த்து தொலைத்து இருக்கிறார். உடனே அவருக்கு ஒரு ஐயம் உண்டாகி இருக்கிறது. அது பெண்களுக்கு கூந்தலில் மனம் இயற்கையிலே வந்ததா அல்லது செயர்க்கையிலா என்று. அதனால் அவர்கள் இருவருக்கும் இடையில நடக்க விருந்த மேட்டர் நடக்காமல் தடைபட்டு விட்டது.  விடை தெரியாமல் இனி அந்தப்புரத்துக்கு வரமாட்டேன் என்று மன்னர் கூறிவிட்டார். இந்த கேள்விக்கு பதில் சொல்லும் நபருக்கு 2000 அமெரிக்க டாலர் பரிசு தருவதாக அறிவிப்பு என்று தண்டோரா  போடப்பட்டது.

" ரெண்டாயிரம் அமெரிக்க டாலரா கடவுளே எனக்கு அது கிடைச்சா வீட்டு வாடகை, இன்டர்நெட் வாடகை குடுத்து,  மிச்ச காசுக்கு பாம்பே போயி சொனகாட்சியிலே மூணு ராத்திரி தங்கலாமே.  ஐய்யய்யோ இப்ப நான் என்ன செய்வேன் சொக்கா, சொக்கா என்று புலம்புகிறார் நாகேஷ்.  அப்போது ஒருவர்  மாறுவேடத்தில் அங்கே வந்து அவருடன் பெறுகிறார்.

எதற்கு புலம்புகிறீர் ஐயா - 

நான் வருவதற்குள் கோவிலில் பொங்கலும் சுண்டலும் போட்டு முடித்து விட்டார்கள் அதனால் பசியில் கத்துகிறேன். - தருமி

இதற்காகவா  அழுவது, இன்று விவேகானந்தர் பிறந்த நாள் , ராமகிரிஷனர் மடத்துக்கு போனால் முந்திரி பருப்பு போட்டு புளியோதரை, தயிர் சாதம்  கிடைக்கும் -

வருசா வருஷம் கரெக்டா போயிடுவீங்க போல இருக்கு. - தருமி

எப்பயாச்சும் -

2000 அமெரிக்க டாலர் கவிதை வேணும் நீ தருவியா - தருமி


எதை பற்றி என்று சொல் நான் எழுதி தருகிறேன் -

நீ எழுதி தருவியா, நான் சொந்தமா எழுதினாலே, ஆனந்த விகடன்ல திருடி சொல்லுறேன்னு பேசிக்கிறாங்க. உன்னை பார்த்தா கவிதை எழுதுறா மாதிரி தெரியலையே - தருமி
பிறகு உனக்கு எப்படி தெரிகிறது -

சின்ன குழந்தைங்க கிட்ட மிட்டாய் திருடி திங்கறவன் போல இருக்கு. - தருமி

என்னை நம்புப்பா, சத்தியமா நான் எழுதி தறேன் -
சரி ரொம்ப கெஞ்சரதுனால நம்புறேன். ஆனா அதுக்கு முன்னாடி சில கேள்வி உன்னை கேக்கணும். அப்பத்தான் நான் நம்புவேன். - தருமி

சரி கேள் -

உலகிலேயே சிறந்த வேலை என்பது - தருமி
"சும்மா இருப்பது"

காதல் திருமணம் செய்வதால் வரும் லாபம், யாருக்கு. - தருமி
" பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கு, வரதட்சனை லாபம் அதனால் "

பெண்களை காதலிக்கும்போது எதில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.- தருமி
" பணப்பையை, கிரெடிட் கார்டு, அண்ட் டெபிட் கார்டு "

பிகருக்காக உயிர் விடுவது. - தருமி
" பத்துகாசு பிரயோஜனம் இல்லை "

இறுதியாக, ஆசைக்கு
" நீ "

மொக்கைபோடுவதர்க்கு
" நான்"

சரி எல்லாமே பொண்ணுங்கள பற்றியே கேக்கிறாயே, நிறைய அடிவாங்கி இருக்கியோ.

நான் மட்டுமா, லோகத்துல இருக்குற எல்லா ஆம்பளைங்களும் வாங்கி இருக்கிறாங்க அடி. சரி உங்கள நம்புறேன், கவிதை எழுதி குடுங்க. - தருமி

" அரசவையில் அனைவரும் அமர்ந்து இருக்கே, மன்னன் தருமி தந்தா கவிதை படித்து, அவருக்கு 2000 அமெரிக்க டாலர் தருகிறார். அப்போர்து நக்கீரர் குறுக்கே வந்து தருமியை கேள்வி கேட்க்கிறார்.

இந்த கவிதை நீங்கள் தான் எழுதிநீரோ - நக்கீரர்

ஆமாம் அய்யா - தருமி

எங்கே ஒரு முறை அந்த கவிதையை வாசியுங்கள்- நக்கீரர்

திடீரென்று இப்படி கேட்டால் எப்படி வாசிப்பது, பொறுங்கள் என்று எழுதியதை பார்த்து படிக்கிறார் தருமி

அதில் ஒரு பிழை இருக்கிறது, உம கவிதையில் ராணி மாதம் ஒரு முறை தான் தலைக்கு குளிக்கிறார் என்றும் அதனால் தான் அந்த மனம் வருகிறது என்றும், வாரத்தில் மூன்று நாள் குளித்தால் அந்த மனம் வராதென்றும் உங்கள் கவிதையில் கூறி இருக்கிறீர்கள் இல்லையா, அப்படி என்றால் பெண்களுக்கு இயற்கையில் மனம் இல்லை என்று கூறுகிறீர் இல்லையா - நக்கீரர்

அப்படியா- தருமி

அப்படியாவா, அப்போ இதை நீ எழுதலியா - நக்கீரர்

நான் தான் எழுதினேன், உங்கள் சந்தேகம் கேளுங்கள் அய்யா- தருமி

அப்படி என்றால் சிவனின் தலையில் இருக்கும் கங்கை தண்ணியிலேயே இருக்கிறாள் அப்படி என்றால், அவருக்கும் இயற்கையில் மனம் இல்லையா - நக்கீரர்

அய்யா நீர் குழப்புறீர் , உங்க கேள்வியில் லாஜிக் இடிக்கிறது, எதோ தப்பு கண்டு பிடிக்கணும் என்கரதுக்காக கேக்கறபோல இல்லை. யோசிச்சி நல்லா கேளுங்கள் அய்யா -தருமி

அப்படி என்றால் இதை நீர் எழுதவில்லை - நக்கீரர்

ஆமாம் இதை எழுதியவர் அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார் அய்யா - தருமி

அவர் வேகமாக உள்ளே வந்து நக்கீரருக்கு நேருக்கு நேர் நின்று பேசுகிறார் .

என் கவிதையில் என்ன குற்றம் கண்டு பிடித்தீர் -

இபப்தானே சொன்னேன், நீயும் ஒளிந்து கொண்டு கேட்டாய் அல்லவா, மறுபடியும் என்னால் சொல்லமுடியாது - நக்கீரர்

கொஞ்சம் அருகில் வாரும் -

என்ன விஷயம் - நக்கீரர்

இப்போ தேவை இல்லாமல் சண்டை எதுக்கு, இந்த ரெண்டாயிரம் வரவிடாம நீ எதன செய்தால் அதை மன்னன் எதவாது மொக்கை பிகருக்கு குடுத்து அந்தப்புரத்தை நிரப்பி விடுவார். பணம் உனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல் போய் விடும். அதனால் ஒன்னு செய்வோம் ரெண்டு பேரும் ஒத்து போயிடுவோம். 1000 அமெரிக்க டாலர் உனக்கு, மிச்சம் எங்களுக்கு.சரியா

இது நியாயமான பேச்சு, சரி எங்க வந்து காசு வாங்கிக்கணும் - நக்கீரர்

இந்த தெரு முனையிலே, தண்ணி டான்க் கிட்ட இருக்கோம் சீக்கிரம் வந்துடுங்க.

இப்போது இந்த கவிதை முழுவதும் எனக்கு புரிந்து விட்டது. என் ஐயம் தீர்ந்து விட்டது. மன்னா முழு பணமும் தருமிக்கு தந்து விடுங்கள். - நக்கீரர்

அப்படியே அய்யா - மன்னன்

பணம் வாங்கிக்கொண்டு இருவரும் வெளியில் சென்றதும். நக்கீரர் மன்னனிடம் இப்படி கேட்க்கிறார்.

மன்னா எனக்கு அரை நாள் லீவ் தேவை படுகிறது. காலையில் இருந்து ஒரே பேதி. -

உடனடியாக செல்லவும், சபையை அசிங்க படுத்தி விடாதீர்கள்.

நக்கீரர் 1000 அமெரிக்க டாலர் வாங்குவதற்கு தெரு முனைக்கு ஓடுகிறார்.

1 comment:

Post a Comment