12 November 2008

யார்ரா இங்கே சரசு ?

பைக்கில் இருந்து வேகமாக இறங்கி மொட்டை மாடிக்கு விறைந்தான். அங்கே குறைந்தது பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அனைவறையும் பார்த்து பேசதொடர்ந்தான்.

" யார்ரா இங்கே சரசு ?"
( ஒருவன் பின் மண்டையை சொரிந்து கொண்டிருந்தான். )

" நீ தான் சரசா " என்று சொல்லும் போதே இன்னொருவன் தன் அக்குளுக்குள் சொரிந்து கொண்டிருந்ததை பார்த்து விட்டு " நீ தான் சரசா என்றவுடன்"

" நான் சரசு புருஷன் " நீ ஏன்டா என் பொண்டாட்டிய பத்தி கேக்கறே.

"எங்க ஏரியாவுல வந்து யாருடா மிறட்டிட்டு போனது, அது சரசு தானே.

" அது சரசு இல்லடா அரசு.

" அது தெரியும் ஆனா இங்கே அந்த பேரு சொல்ல கூடாது ."

" அதான் நான் சொல்லிட்டேனே "

" அது பரவாலே இனிமே சொல்லாதே சரியா, இந்த பேச்சில அதை மறந்துட்டேன். யார்ரா இங்கே சரசு "

( ஒருவன் சரசுவை காட்டியதும் அங்கே சென்று அவரிடம் இப்படி பேச துவங்குகிறார்)

"நீதான் சரசா பார்த்தியா நீ யாருன்னு கூட எனக்கு தெறியலை. உனக்கும் எனக்கும் என்ன சண்டை. நீ எதுக்கு என் பேச்சிக்கு வற்றே. எவன் பொன்னையோ காதலிச்சா உனக்கு எங்க வலிக்குது "

" எனக்கு முட்டி பின் பக்கம் லேசா வலிக்குது "- சரசு

" அது எதுக்கு எங்கிட்ட சொல்றே "

" நீதானே சொல்ல சொன்னே - சரசு

" யோவ் , நான் கேட்டது வேறெ.

" வேற என்ன கேட்டே ஞாபகம் வரலியே நீயே சொல்லு-சரசு

" யோவ், இன்ன கிண்டல் பண்ணிட்டிருக்கிய "

" சரி இப்ப என்ன நீ அந்த மொத்த வசனமும் பேசணும் அதானே பேசு எங்க தலை எழுத்து. கேட்டு தான் ஆகணும் - சரசு

" பிலிம் காட்டுறது, படம் காட்டுறது "

" ரெண்டும் ஒண்ணுதான் -சரசு

"அவனை முறைத்துவிட்டு , உன்னோட படத்தை என் தியேட்டர் லே ஓட்டின் சும்மா ஸ்க்ரீன் கிழிஞ்சிடும்.

"தியேட்டர் இருக்குது உனக்கு , எந்த ஏரியா ல இருக்குபா - சரசு

" இந்த ஊருக்கே நீ மாசா இருக்கலாம் ஆனா உசுருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு "

" எல்லாம் பேசிட்டியா , தொண்டை எரியும் இந்தா இந்த பத்து ரூபாய்க்கு அந்த தெரு மொனயிலே பொட்டி கடையில ஒரு சோடா வாங்கி குடிசிட்டுபோ. -சரசு

" ஏய் "

"ஏன்டா அப்படி கத்தற , நான் உன் பக்கத்துல தானே நிக்கறேன். -சரசு

" நீ எங்கிருந்தாலும் இந்த இடத்துல நான் கத்தியே ஆகணும்." -

" சரி பார்த்து போ , இந்த பில்டிங் இன்னும் கட்டி முடிக்கலை ஏடாகூடமா நடந்து போயி , கல்லை மேல போட்டுக்கபோறே. - சரசு

" அந்த பத்து ரூபா...."

" அதானே பார்த்தேன் " - சரசு

5 comments:

Anonymous said...

enna padaththula ithu varum... onnum puriyala

கிறுக்கன் said...

padam theriyalenna prachanai illai. viunga.

யூர்கன் க்ருகியர் said...

சூப்பர் காமெடி

gundumama said...

hey ithu yetho vijay padam.. ippadi comedy panirukeenga :D

Superappu!!!!

Anonymous said...

Vijay Nalla irukura Mass Scene athu onnuthan(ennaikku puduchathu)
,athayum ippadi kalachitingala.
Movie - Thirumala
Pathivu sama Super Kalaichal.

Post a Comment