16 November 2008

நடிகர்களின் வளர்ப்பு பிராணிகள் லொள்ளு

பொதுவாக அனைத்து நடிகர் , நடிகைகளும் வளர்ப்பு பிராணியாக நாயை நிச்சயம் வளர்ப்பாகர்கள். இங்கே ஒரு சின்ன கர்ப்பனையாக அவர்கள் வளர்க்கும் நாய் எப்படி குறைக்கும் என்பதை பார்க்கலாம்.

முதலாவது - நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு நடிகரின் வீட்டுக்குள் சென்றார்கள். அங்கே கட்டப்பட்டிருந்த நாய் ஒரு முறை குலைத்து பின்பு தன் இடத்தில் அமைதியாக படுத்து கொண்டது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் மற்றொருவரிடம் கேட்டார்.

" என்ன சார் ஒரு வாட்டி குலைத்து போயி அதோட இடத்துல படுத்திடிச்சி. என்றார். "

" அது சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாய் ஒரு வாட்டி குலைச்சா நூறு தடவை குலைச்சா மாதிரி"

" அப்படி பார்த்தா கூட நாம நூற்றி பத்து தானே. அந்த பார்த்தாலும் இன்னொரு தடவை கத்தி இருக்கனுமே."


" அதுவா , ஏற்க்கனவே நூற்றி தொண்ணூறு பேரு வந்தப்போ ரெண்டாவது தடவை குலசிட்டது. அந்த தொண்ணூறு இந்த பத்து கணக்கு சரியா வந்துடிச்சி இல்லை. "

" சார் சூப்பர் சார் "

" சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாயின்ன சும்மாவா. "

இரண்டாவது - அனைவரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். அங்கே காவல் காத்துக்கொண்டு இருந்த நாய் குலைத்து கொண்டிருந்தது.

" சார் இந்த வீட்டுல வளர்க்கற நாய் ஏன் சார் அழுவுது. "

" யோவ் , அது அழலயா. அழற மாதிரி நடிக்குது."

" அப்படிங்கள, நான் கூட நிச்சமாலமே இந்த வீட்டுக்கு சொந்தகாரங்க சோறு போடாததனால அழுவுதுன்னு நினைச்சிட்டேன் சார்.

" பின்னே யாரு வளர்க்கற நாய் தெரியுமா."

" யாரு சார் "

" உலக நாயகன் வளர்க்கற நாயப்பா இது, இது கூட இதுக்கு நடிக்க தெரியலைனா அப்பறம் எப்படி."

மூன்றாவது - அனைவரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். அங்கே காவல் காத்து கொண்டிருந்த நாய் ஒரு முறை குளைத்து தன் இருப்பிடத்தில் படுத்து கொண்டது.

" சார் இன்ன சார் இந்த வீட்டுல வளர்க்கற நாய் கூட ஒரு தடவை குளைத்து போய்ட்டு படுத்துடிச்சீ . யாரு வளர்க்கற நாய் சார் இது "

" இது இளைய தளபதி வளர்க்கற நாய் "

" அப்படிங்களா, அப்பா ஏன் சார் சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாய் மாதிரியே பண்ணுது. "

"சூப்பர் ஸ்டார் வளர்க்கராரே ஒரு நாய் அது மாதிரியே , இவறும் தன் நாயை பலக்கராறு."

" அது மாதிரியே இதுவும் ஆகுமா சார் "

" நீ சொல்லு ஆகுமா."

" என்ன கேட்டா கண்டிப்பா முடியாது சார். "

" அதேதான். "

நான்காவது - தெரு முனையில் இவர்களை பார்த்த உடன் இவர் வளர்க்கும் நாய் குலைக்க ஆரம்பித்து விடுகிறது. இவர்களுக்கு பயம் வந்து விடுகிறது. பயந்து கொண்டே வீட்டின் வாசலுக்கு வந்தவுடன் அது அமைதியாக தன் இடத்தில் படுத்து கொள்கிறது.

" இன்னா சார் இது , தெரு மொனயில கத்தறத பார்த்து நான் கூட கிட்ட வந்த உடனே கடிச்சி குதற போகுதுன்னு நெனச்சேன். ஆனா ஒன்னும் பண்ணாம படுத்துடிச்சி."

" இது அல்டிமடே ஸ்டார் வளர்க்கற நாய். எப்படி சரியா பண்ணிச்சா.

" இப்ப புரியுது சார், அது எதுக்கு தூரமா இருக்கும் போது சத்தம் போட்டு, கிட்ட வந்தப்போ அமைதி ஆயிடிச்சின்னு.


ஐந்தாவது - அனைவரும் உள்ளே சென்ற உடன் . இந்த நாய் அனைவரையும் உற்று பார்த்து இவர்களை இதற்க்கு முன்பு பார்த்தோம் என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு வாழ் அசைத்தவாறே , அவர்களை சத்தம் போடாமல் உள்ளே விட்டது.


"இன்ன சார் இவரு வளர்க்கற நாய் நம்மள யாரையும் பார்த்து ஒன்னும் பண்ணலை. இது சூரி..... வளர்க்கற நாய். ரொம்பவும் மரியாதையா மத்தவங்க கிட்ட பலகரவறு அவரு(சூரி..) . அப்போ அவரு வளர்க்கிற நாய் எவ்வளோ மரியாதையா நடந்துக்கும்.

" சார் அன்யாயதுக்கு நல்ல படியா வளர்த்திருக்கார் சார்.

" குடும்பம் அப்படி."

ஆறாவது - அனைவரும் வீட்டுக்குள் செல்கிறார்கள் . அனைவரையும் பார்த்து குறைக்கிறது. அதே நேரத்தில் இரண்டு பெண்கள் போகிறார்கள். அவர்களை குறைக்க மறுத்து அவர்களுக்கு வாழ் அசைக்கிறது. அந்த பெண்கள் போனதும் மறுபடியும் ஆண்களை பார்த்து குலைக்கிறது.

" சார் இன்னது சார் ஆச்சர்யமா இருக்கு . ஆம்பளைங்கள பார்த்தா குலைக்குது . பொம்பளைங்கள பார்த்தா வாழ் ஆட்டுதூ."

" நீயே கண்டுபிடி பார்க்கலாம் இது யார் வளர்க்கற நாய் என்று "

சிறிது நேரம் யோசித்து.


" கண்டு பிடிச்சிட்டேன் சார் , சின்ன சூப்பர் ஸ்டார் வளர்க்கற நாய் இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்கே சார். "


" சொல்லவே மாட்டேன்."

1 comment:

Anonymous said...

this is very good concept. not bad.

Post a Comment