நேற்று சில நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேன். நிறைய பேசினோம். எதை எதையோ பேசிக்கொண்டு இறுதியாக இலங்கை பிரச்சினைக்கு வந்தோம். அதை ஆரம்பித்ததுமே ஒரு நண்பர் குறுக்கிட்டு, அவங்க ஊர்ல போயிட்டு நம்ம ஆளுங்க தேவையில்லாம சண்டை போடறாங்கப்பா, இப்ப நம்ம வீட்டுல யாராச்சும் வந்து நம்ம கையுல இருந்த ரிமோட் பிடிங்கி சேனலை மாத்தினா நமக்கு எவ்வளவு கோபம் வரும். அதே மாதிரிதான் நம்ம ஆளுங்க அங்கே பண்றாங்க. அவங்க ஊர்ல போயிட்டு அவங்க கிட்ட சண்டை போடறது தப்பு தான் என்றார்.
இவர் மட்டும் அல்ல , தமிழ் நாட்டில் மற்றும் இந்தியாவிலும் பெரும் பாலானோர், இலங்கை என்ற நாடு சிங்களத்தவர்கள் நிலம் என்றும், ஈழ தமிழர்கள் தேவையில்லாமல் அங்கே சென்று அவர்களிடம் வம்பு செய்து கொண்டு இருப்பதாகவும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் . படித்தவர்களுக்கே இந்த அபிப்பிராயம் என்றால் படிக்காதவர்கள் பற்றி யோசித்து பாருங்கள்.
இலங்கை பிரச்சினையில் அடிப்படை தகவல் கூட இங்கே பெரும் பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வில்லை. இலங்கை பிரச்சினையில் பழைய அடிப்படை தகவல் ஒன்றை முதலில் நாம் தெரிந்துக்கொள்வோம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை என்று இப்போது அழைக்கப்படும் நாடு, மக்களே இல்லாத ஒரு நிலப்பரப்பு. ஒரு தீவு. பிறகு மக்கள் அங்கே குடி பெயர்ந்தார்கள். பிறகு அது ஒரு சமூகம், பின் அது ஒரு நாடாக மாறி இருக்கிறது.
அப்படி என்றால் அங்கே குடி பெயர்ந்த மக்கள் யார் ? ( அதற்க்கு முன் ஒன்றை தெரிந்து கொள்வோம். எப்படி பாகிஸ்தானில், பங்களாதேஷில், வாழும் மக்கள் ஆரம்பத்தில் இந்தியர்களாக இருந்தார்களோ, அது போலவே இலங்கையில் வாழும் அனைவரும் இந்தியா வம்சா வழிகளே. )
ஒன்று வட இந்தியா வில் இருந்து சென்று குடியேறிய மக்கள்.
மற்றொன்று ராமேஸ்வரத்தில்( தமிழகத்தில் ) இருந்து சென்று குடியேறிய தமிழ் மக்கள்.
இவர்களைத்தான் தற்ப்போது சிங்களத்தவர் என்றும் ஈழ தமிழர்கள் என்றும் அழைத்து கொண்டு இருக்கிறோம்.
இது தான் ஆரம்ப அடிப்படை உண்மை .
இப்போது சொல்லுங்கள், வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்வது சுலபமா. அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்வது சுலபமா. வட இந்தியாவில் இருந்து கொண்டு முதலில் குடி பெயர்ந்து இருப்பார்களா அல்லது தமிழர்கள் முதலில் குடி பெயர்ந்து இருப்பார்களா.
யோசித்து பாருங்கள் யாருக்கு அதிக உரிமை இருக்க வேண்டும் இலங்கை நிலப்பரப்பில்?
இந்த கட்டுரைக்கு தங்கள் கருத்துகளை நிச்சயமாக தெரிய படுத்தவும். இதற்காக ஒரு ஐந்து நிமிடம் வீணாக்கினால் ஒன்றும் தவறில்லை.
பின் குறிப்பு - என்னை கேட்டால் இலங்கை என்னொரு
நிலப்பரப்பு இருக்கிறது என்று ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க சென்ற ஒரு தமிழ் மீனவன் தான் சொல்லி இருப்பான் என்று சொல்வேன். அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.
17 November 2008
இலங்கையில் அதிக உரிமை சிங்களத்தவர்களுக்கா , ஈழ தமிழர்களுக்கா ?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை என்று இப்போது அழைக்கப்படும் நாடு, மக்களே இல்லாத ஒரு நிலப்பரப்பு. ஒரு தீவு. பிறகு மக்கள் அங்கே குடி பெயர்ந்தார்கள். பிறகு அது ஒரு சமூகம், பின் அது ஒரு நாடாக மாறி இருக்கிறது.
அப்படி என்றால் அங்கே குடி பெயர்ந்த மக்கள் யார் ? ( அதற்க்கு முன் ஒன்றை தெரிந்து கொள்வோம். எப்படி பாகிஸ்தானில், பங்களாதேஷில், வாழும் மக்கள் ஆரம்பத்தில் இந்தியர்களாக இருந்தார்களோ, அது போலவே இலங்கையில் வாழும் அனைவரும் இந்தியா வம்சா வழிகளே. )
ஒன்று வட இந்தியா வில் இருந்து சென்று குடியேறிய மக்கள்.
மற்றொன்று ராமேஸ்வரத்தில்( தமிழகத்தில் ) இருந்து சென்று குடியேறிய தமிழ் மக்கள்.//
முடியல.. சுத்தம்..
உங்க நண்பர் தேவலை... :(
இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.
இலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை
விஜயன் குவேனிக் கதைகளை நான் வரலாறுகளாக நினைக்கவில்லை. அவ்வாறே அவற்றை உண்மையென்று கொண்டால் விஜயன் சிங்கத்துக்கும் மனிதப் பெண்ணுக்கும் பிறந்தான் என்றதும் உண்மையென்றும் கொள்ள வேண்டும். மகாவம்சம் சிங்கள மேலாண்மையை நிறுவ எழுதப்பட்ட புராணப் புனைவு.
ஆனால் தொல்லியல் ஆய்வுகள் வரலாற்றுக் காலம்தொட்டே இலங்கையில் மனிதர்கள் இருந்தார்கள் என்பதை நிறுவியிருக்கிறது. யாருமற்ற தீவுக்கு சென்ற மனிதக் கூட்டம் இல்லை.
எனது கருத்து இடையில் வந்தது எவராயினும் இலங்கையில் தமிழருக்கு எனவும் சிங்களவருக்கு எனவும் தெளிவாக வரையறை செய்து பிரிக்கப்பட்ட மரபுவழி பிரதேசங்களும் இராச்சியங்களும் ஒல்லாந்தரின் இறுதிக் காலம் வரை இருந்தன என்பதுதான்.
போர்த்துகீசரும் ஒல்லாந்தரும் அவற்றைத் தனித்தனி சிங்கள தமிழ் இராச்சியங்களாக கருதியே தமது நிர்வாகத்தையும் பிரித்தமைத்தார்கள்.
ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் சிங்கள இராச்சியங்கள் இணைக்கப்பட்டது. இற்றைவரை தொடர்கிறது
Post a Comment