18 November 2008

அதே.........- ரெட்

வேகமாக ஒருவர் நடந்து கொண்டு வந்தார். அவர் பின்னால் நான்கு பேர் அவரை பின் பற்றி கொண்டே வந்து கொண்டு இருந்தனர். முன்னே செல்பவர் அவர்களுக்கு தலைவன் என்று வைத்து கொள்ளுங்கள்.

அவர்கள் நேராக பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றனர். அங்கே ஆண் தலைமை ஆசிரியரும் ஒருவரும் , பெண் தலைமை ஆசிரியர் ஒருவரும் அமர்ந்து கொண்டு இருந்தனர். தலைவன் நேராக உள்ளே சென்று அவர்களுடன் பேசலானான்.

" நான் உள்ளே வரலாங்களா."

" அது உள்ள வர்றதுக்கு முன்னாடி கேட்க்கனும் . " - தலைமை.ஆசரியர் (தா.ஆ)

" சரி விடுங்க நாம விசயத்துக்கு வருவோம் என்று சொல்லி கொண்டே இருக்கையில் அமர்ந்து கொள்கிறார். "

" என்ன விஷயம் ". தா.ஆ.

"நேத்து ஒரு பையனுக்கு இந்த ஸ்கூல் ல சீட் தர முடியாதுன்னு சொன்னீங்களாமே. "

" ஆமா டோநெசின் கேட்டோம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால்தான், சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டோம். - தா.ஆ

" அது எவ்வளவு "

" இரண்டு லட்சம் - தா.ஆ

" இதுக்கு நீங்க மொக மூடி போட்டுக்கிட்டு கொள்ளை அடிக்கலாம் . "

" உங்கள மாதிரியா " - தா.ஆ

" ஏய் "

" சரி கோப படாதீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க "- தா.ஆ

" சீட் தந்தாவனும்."

" தரலைன்னா "- தா.ஆ

" ரெட் நா என்ன தெரியுமா. "ஆர்" - நா ரேவோளுசின், "ஈ " நா எசுகாசின், டீ நா.......
ஆமா " டீ" நா என்னது என்று தன் பின்னால் நின்று கொண்டு இருந்த தன் ஆளை பார்த்து கேட்டதுமே .

" யாருக்கு தெரியும் என் பொண்டாட்டியே ஒரு மாசம் கழிச்சு இன்னிக்கிதான் வீட்டுக்கு வந்தா. சந்தோசமா இருக்காளுன்னு நினைச்சேன். என்னை இங்க கொண்டு வந்துட்டு என்ன கேட்டா எனக்கு இன்னா தெரியும். என்று அடிக்க கைய்யை தூக்குகிறான். "

" சரி இருடா முடிச்சிட்டு போயிடலாம். சீக்கிரம் உங்க பதிலை சொல்லுங்க."

" பதிலை என்னை சொல்ல சொல்லி நீ அந்த மேடத்தை பார்த்து சிரிச்சிட்டு இருக்கே. தா.ஆ

" இந்த ஆன்டி ரொம்ப நேரமா பேசமா இருக்காங்க லேனு அவங்க கிட்ட சொன்னேன்."

" அது ஆன்டி இல்லப்பா, அறுவது வயசு பாட்டி. " தா.ஆ

" அப்படியா, பார்த்தா தெரியலையே. "

" ரொம்ப காஞ்சி போயி கிடக்குற போல இருக்கு. சீட் தரமுடியாது, அதுக்கு எங்க ரூல்ஸ் ஒத்துக்காது. தா.ஆ

"இந்த ரெட் எதுக்கும் ஒரு டைம் தருவான். உனக்கும் ஒரு டைம் தரேன். வெளியில மழை நிக்கறதுக்குள்ள. முடியுமா முடியாதான்னு சொல்லணும் "

" அப்படினா போயிட்டு ஒரு வாரம் கழிச்சி வா. " தா.ஆ

" எதுக்கு"

" மழை நிக்கறதுக்கு ஒரு வாரம் ஆகும். நேத்தே டிவியில சொல்லிட்டாங்க. தா.ஆ

" அப்பன்னா அது வேண்டா. "

" உங்க டேபிள் ல காகிதங்கள் மேல வைக்கிற வெயிட் கல்லு எங்க காணோம். "

" என் அதை சுத்திவிட்டு, நீ டயலாக் பேசுவே அதானே. இதெல்லாம் நீ பன்னுவேனுதான், நீ வரும் போதே அதை எடுத்து ஒளிச்சி வெச்சிட்டோம். " தா.ஆ

" அது இல்லன பரவா இல்லை. என்று சொல்லி கொண்டே சுற்றி கொண்டு இருந்த மின் விசிறியை அனைத்து . இது " நிக்கறதுக்குள்ள " ( மிகவும் சாட்தமாக சொல்லிவிட்டு ) எங்களுக்கு உன் பதிலை சொல்லு. "

" மின் விசிறி நின்றதும் , தலைமை ஆசிரியரும் , ஆசிரியையும் எதோ தங்களுக்குள் பேசிக்கொண்டு பிறகு தலைமை ஆசிரியர் சொன்னார்.

" சீட் தர முடியாது " - தா.ஆ

" அதே...... என்று சொல்லி இருக்கையில் இருந்து எழுந்தான்.

" நான் சீட் தர மாட்டேனு சொன்னேன், என்றார் தலைமை ஆசிரியர் மறுபடியும் .

" அதே......"

" சீட் இல்லன்னு சொல்லறேன் . அது அது எங்கரே. - தா.ஆ

" அது... அது......அது....... என்று சொல்லிக்கொண்டே அனைவரும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

" என்ன சார், நாம சீட் தர மாட்டோம் நு சொல்றோம் அவரு பாட்டுக்கு போயிட்டாரு. - தலைமை ஆசிரியை

"தெரியலை. ஆனா ஒன்னு உண்மை. ரெட் கு கோபம் வந்த ரத்தம் பார்க்காம விடமாட்டனு சொன்னாங்க. அது நிச்சயமா உண்மை. ரம்பத்தை போட்டி கழுதை அருத்துட்டானே . - தலைமை ஆசிரியர் .

2 comments:

Anonymous said...

super mokkai keep it up

ஆட்காட்டி said...

சேம் பிளட்.

Post a Comment