பொங்கல் பண்டிகைக்காக முன்னணி நடிகையிடம் பேட்டி எடுக்க மூன்று பேர் செல்கின்றனர் . அவர்களுக்கு எதிரில் ஒரு பெண் வருகிறாள். அவளிடம் பேட்டி எடுப்பவர் கேட்க்கிறார்.
பேட்டி எடுப்பவர் - த்ரிசிந்தாரா மேடம் பார்க்கணும்
நடிகை - ஹலோ அது நான் தான் சொல்லுங்கள்.
பேட்டி எடுப்பவர் - அடையாளமே தெரியலை மேடம் . நீங்க இந்த வீட்டு வேலைக்காரின்னு நினைச்சிட்டோம். மன்னிச்சிக்கோங்க. நாங்க பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பேட்டி எடுக்க வந்து இருக்கோம்.
நடிகை - இப்போ நான் மேக் அப் இல்லாம இருக்கேன். சரி இங்கயே இருங்க. ரெண்டே மணி நேரத்துல மேக் அப் போட்டுகுட்டு வந்துடுறேன்.
நடிகை உள்ளே சென்றதும் தன் நண்பனிடம் சொல்கிறான். பார்த்தியா உன் கனவு கன்னியை பிச்சை எடுக்கறவ மாதிரி இருக்கா மேக் அப் இல்லனா. என்று சொல்கிறான்.
மேக் அப் போட்டு கொண்டு வந்த உடன் பேட்டி ஆரம்பிக்கிறது.
பேட்டி எடுப்பவர் - நீங்க மொத்தம் எத்தன படம் நடிச்சி இருக்கீங்க மேடம்.
நடிகை - தமிழ் லே ஆறு படம். தெலுகுலே மூணு படம். உங்களுக்கு ஹிந்தி தெரியுமா. ஹிந்தி படம் பார்க்கற பழக்கம் இருக்கா.
பேட்டி எடுப்பவர் - இல்லை மேடம். எனக்கு ஹிந்தி புரியாது.
நடிகை - அப்பனா ஹிந்தி யில கூட ரெண்டு படம் பண்ணிட்டேன்.
பேட்டி எடுப்பவர் - நீங்களும் அந்த நடிகரும் போன வியாழ கிழமை எம் ஜீ எம் ல சுத்தி நீங்கலாமே.
நடிகை - அது சுத்த பொய்யின்னு என்னால நிரூபிக்க முடியும். அவங்க சொல்லற அந்த வியாழ கிழமை நானும் அந்த நடிகரும் நட்சத்திர ஹோட்டல் ல ரூம் போட்டு பேசிட்டு இருந்தோம். இப்ப தெரியுதுங்கள அது பொய்யின்னு.
பேட்டி எடுப்பவர் - ஆமாங்க. அது பொய்யி தான். போன படத்துல டைரக்டர் கும் உங்களுக்கும் எதோ பிரச்சினயாமே. என்ன மேடம்.
நடிகை - பார்தீங்கன்னா அன்னிக்கி சீன் படி மேல ஒரு துணி, கீழ ஒரு துணி தான் போட்டு நடிக்கணும். நானும் அது படியே போயிட்டேன். திடீர்னு டைரக்டர் முழு நீல செலைய குடுத்து கட்டி கிட்டு வரசொல்லிட்டாறு. அது மட்டு மில்லாமே இடுப்பு தெரிய கூடாதாம். முழு நீல ஜாக்கேட்டாம். என்னால இது மாதிரி நடிக்க முடியாதுன்னு மறுத்துட்டேன். அது தான் பிரச்சினை.
பேட்டி எடுப்பவர் - அப்படியா சொன்னான் அந்த டைரக்டர். எங்க கண்ணுல மண்ணை போட்டுடுவான் போல இருக்கே. இந்த மாதிரி டைரக்டர் வளர கூடாது மேடம். இன்ன சொல்லறீங்க.
நடிகை - யு ஆர் கரெக்ட் .
பேட்டி எடுப்பவர் - உங்க போட்டி நடிகை டூ பீஸ் ல வந்து கலக்கிட்டத பேசிகிட்டு இருக்காங்க. உங்கள அவங்க முந்திட்டதா பேசிக்கறாங்க.
நடிகை - அவ டூ பீஸ் தானே . அடுத்த படத்துல நான் ஒன் பீஸ் ல வரபோறேன் அப்பா தெரியும் .
பேட்டி எடுப்பவர் - மேடம் அப்படியா ( சந்தோஷமாக )
நடிகை - யோவ், ஒரே துணியில செய்த நீச்சல் உடை யை சொன்னேன்.
பேட்டி எடுப்பவர் - ச்சே... ஜஸ்ட் மிஸ் என்று நினைத்து கொண்டான்.
பேட்டி எடுப்பவர் - உங்க ரசிகர்களுக்காக என்ன சொல்ல போரீங்கே
நடிகை - கொஞ்ச கொஞ்ச மா என்னோட டிரஸ் கொரைசிகிட்டு தான் வரேன். ஒண்ணுமே இல்லாம அடுத்த வருஷம் ஒரு படம் பண்ண லாமுன்னு ஒரு ஐடியா இருக்கு.
பேட்டி எடுப்பவர் - நீங்க உங்க ரசிகர்களை நல்லா புரிஞ்சி வெச்சி கிட்டு இருக்கீங்க.
நடிகை - அவங்க இல்லனா நான் இல்லை.
பேட்டி எடுப்பவர் - மேடம், ஒரு வேலை நீங்க நடிக்க வரலைனா நீங்க இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்து இருப்பீங்க.
நடிகை - கல்கத்தாவுல , சோனாகாச்சீ இருக்கில்ல.
பேட்டி எடுப்பவர் - மேடம் என்ன சொல்லறீங்க. !
நடிகை - யோவ், முழுசா சொல்ல விடுயா. அதுக்கு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஒரு காலேஜ் ல எம் பீ எ படிச்சிகிட்டு இருந்து இருப்பேன்னு சொல்ல வந்தேன் .
பேட்டி எடுப்பவர் - நல்ல வேலை. அங்க ஏதோ கொஞ்சம் கூட்டம் வருது. நீங்க அங்க போயி அங்கயும் ஈய்யடிக்க கூடாது பாருங்க. என்று தன் மனதுக்குள் நினைத்து கொள்கிறான்.
பேட்டி எடுப்பவர் - எப்ப மேடம் உங்க கல்யாணம
நடிகை - என்னையும் ஏத்துக்கற ஒரு தொழில் அதிபர் கிடைக்கிற வரைக்கும்.
பேட்டி எடுப்பவர் - பாவம் அந்த ஆளு. என்று நினைத்துக்கொண்டு
அங்கிருந்து விடை பெறுகிறார்கள்.
23 November 2008
இது செம்ம ஹாட் மச்சி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:)
anne superungo.......epdine ipdiyellam yosikiringalo......
Post a Comment