இரயில் கிளம்புவதற்காக தயாராக இருந்தது. அதை சுற்றிலும் ஒரே கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தை மெதுவாக தள்ளிக்கொண்டே இரயில் பெட்டி அருகிள் வந்துகொண்டிருந்தான் சீனு . உள்ளே அமர்ந்திருக்கும் விஜிக்கு கைய்யை தூக்கிக்காட்டிக்கொண்டே முன்னேறி அருகிள் சென்றான். ஆனால் விஜயோ சீனுவை தெரியாதவள் போல் தலையை திருப்பிக்கொண்டு தன் தாயோடு பேசிக்கொண்டிருந்தாள். அருகிள் சென்று சீனு பேச தொடங்கினான்.
" விஜி சீனு விஜி என்றான் ( விஜயோ அவனை தெரியாதவள் போல் அவனை உற்று பாத்தால் . சீனு தொடர்ந்தான்.
" நீ பார்ல ஒட்டு துணி கூட இல்லாம ஆடிகிட்டு இருக்கும் போது என் கை குட்டை குடுத்தனே ஞாபகம் வரலை , சீனு விஜி சீனு "
( விஜியின் முகத்தில் சலனம் இல்லை )
" நான் பிரியாணி வாங்கிட்டு வந்தப்போ முட்டை, சிக்கன் பீசெல்லாம் நீ சாப்பிட்டு எனக்கு வெறும் குஷ்கா மட்டும் வைப்பியே என்னன்னு நான் கேட்டா காக்கா வந்து தூக்கினு போச்சின்னு கைய்யை மேல காட்டுவியே. சீனு விஜி சீனு"
( பாவம் என்று தன் தாயிடம் விஜி சொன்னால் )
" அப்பறம் நானு எதிர் வீட்டு ஆன்டி குளிக்கறதை ஒளிஞ்சிருந்து பார்த்தேனு அதை அவங்க புருசன்கிட்ட சொன்னியே, அவரு கூட என்னை குனிய வெச்சி முதுகுலயே குத்தினார் , சீனு விஜி சீனு
( பைத்தியமுன்னு நெனைக்கிறேன் )
சற்று அருகிள் ஒரு குடம் இருந்தது . அதன் அருகிள் விரைந்தான் சீனு . அருகிள் சென்று குடத்தை தள்ளி விட்டு அதன் பக்கத்தில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து இரயில் பெட்டி அருகிள் சென்றான்.
"நானும் ரொம்ப நேரமா நல்ல முறையா சொல்லி பார்க்கறேன் இன்னாடி நடிக்கறீங்க. மரியாதையா ஆறு மாசமா நீ சாப்பிட்ட சாப்பாடுக்கு , அப்பறம் நீ பண்ணின செலவெல்லாம் குடுத்துட்டு போகணும். இல்லேன்னா முட்டிய பேத்துருவேன். இறங்கி வாங்கடி . உஷாரா உங்க ஆத்தாள பார்த்ததுமே பைத்தியம் தெளிஞ்ச மாதிரி எஸ்கேப் ஆகலாமுன்னு பார்க்கரிய. ஜாக்கிரதை
விஜியும் தன் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்து முளித்துக்கொண்டனர். பிறகு விஜி தாய் கேட்டாள்
தம்பீ இந்த இடத்துல இப்படி பேசக்கூடாதே.
" இல்லாமே , நான் குடத்தை எடுத்துக்குட்டு தலைல வெச்சிகிட்டு , அந்த இடத்துல படுத்து பொரலநும. அதானே , அது நடக்காது . ரெண்டு பேரையும் பெரட்டி , பெரட்டி அடிப்பேன். மரியாதையா பணம் குடுத்துட்டு போங்க. கமல் சாரை ஏமாத்தின மாதிரி என்னை ஏமாத்த பார்க்கரிங்கள . "
"இறங்குங்கடீ இரயில விட்டு. "
14 November 2008
சீனு விஜி சீனு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
போக்கிரி பிரகாஷ்ராஜ் வந்தால் இப்படித்தான் இருக்கும்.........
இந்த வசனத்தைவிட சோகமான ஆனால் மக்களிடம் காமடியான காட்சி ஒன்று படத்தில் உண்டு
Post a Comment