இன்னைக்கு காளைல என்னோட மொபைல் போன் கு ரீசார்ஜ் செஞ்சேன். அடுத்த அஞ்சு நிமிசத்துல வேக வேகமா மூணு மெசேஜ், அதுவும் நான் எந்த கார்டு ரீசார்ஜ் செய்தேனோ அவர்களே அனுப்பியது. அதுக்கப்புறமும் நிறைய மெசேஜ் வந்தது. முதல் வந்த மூணு மெசேஜ் என்னன்னு பார்ப்போம்.
முதலாவது, உங்களுக்கு பிடிச்ச நடிகையோ அல்லது நடிகரோ அவருடைய விவரங்களை உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பப்படும். இதற்க்கு கட்டணம் மாதம் 15 ருபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.
இரண்டாவது உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்கள் உங்கள் ரிங் டோன்களாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்க்கு மாதம் 15 ரூபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.
மூன்றாவது கிரிக்கெட் ஸ்கோர் உடனுக்குடன் தெரிந்துகொள்ள நீங்கள் இதை ஆக்டிவடே செய்து கொள்ளுங்கள். மாத கட்டணம் வெறும் 15 மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.
நான் ரீசார்ஜ் செஞ்சது வெறும் 21 ரூபாய்க்கே . அதுல நமக்கு தர்றது வெறும் பதனஞ்சு ரூபாயில இருந்து பதனாறு ரூபா. அந்த மிச்ச ரூபாய கூட நம்மள போன் செய்ய விடாம அதை புடுங்க எவ்வளவு கேவலமான வேலை இந்த நிறுவனங்கள் செய்யுதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யுது. இவங்க எந்த மாதிரி ஆன ஆளுங்க அப்படின்னு பார்த்தா ஒருத்தன் செத்து போனதுக்கு அப்புறம் அவன் நெத்தியில ஒரு ரூபா வைப்பாங்க இல்லையா. அதை பார்த்துட்டாங்கன்னா கூட அவன் காதுல எதனா பிளான் சொல்லி ஆக்டிவடே கணக்குல அந்த ஒத்த ரூபாய கூட பிடிங்கிடும் ஜாதி. அந்த காசு தீர்ந்ததும் அப்புறம் ஒரு மெசேஜ் கூட இவங்க அனுப்ப மாட்டானுக.
இப்போ எல்லாம் மெசேஜ் வர்றது இல்லை. போன் வருது. அதுல தொடர்ந்து பாட்டு வருது. ஒன்னு அமுக்குனா ஒரு பாட்டு , அதுவே ஆக்டிவடே ஆயிடும். ரெண்டு அமுக்குனா வேற பாட்டு. அந்த நேரத்துல தெரியாம எதனா நம்பர் அமிக்கிட்ட அடுத்த கணம் உங்க பத்து ரூபா மாயம் ஆயிடும். இந்த மாதிரி தெரியாம என் நண்பன் அந்த நேரத்துல தெரியாம ஒரு நம்பர் அமுக்கினதால காசு பிடிச்சிட்டாங்க. அதை நிறுத்த சொல்லி இன்னமும் அவங்க கிட்ட சண்டை போட்டு கிட்டு இருக்கான். மெசேஜ் வந்தா உனக்கு என்ன நீ ஒன்னும் பான்னாம இரு அப்படின்னு சம்பந்தபட்டவங்க கேக்கலாம். நான் காசு குடுத்து பேச கார்டு வாங்குறேன். நீ பேச அனுமதிக்கிரே. அதுக்கு அதுக்கு காசு பிடிக்கிறே. அதில்லாம அதிகமாவே பிடிக்கிறே. அப்புறம் என்ன மைருகுடா என் மொபைல் கு மெசேஜ் அனுப்புறே. மெசேஜ் அனுப்பினாலும் பரவா இல்லை இதேன்னே கால் பண்ணி தொல்லை பண்றாங்களே நு நாம நினைக்க கூடாது. எதுக்கு அந்த மெசேஜ் கூட அனுப்பனும். அதுக்கு எங்கயாச்சும் போயி பிச்சை எடுக்கலாம் இவனுக. நாம ஒரு பிளான் ஆக்டிவடே பண்ணும் போது அவங்க அதை நிறைவேற்றதுல இருக்குற வேகம் , ஒரு பிளான் நாம நிறுத்தறதுக்கு முயற்சிக்கும் போது அவங்க காட்டுறதில்லை. கொஞ்சம் இழுத்து அடிச்சா இன்னொரு பதினைந்து ரூபா பிடிங்கிடலாமுன்னு அவங்க அறிவு. உங்க அறிவுள்ள எங்க ........... வைக்க.
4 August 2009
காசை பிடுங்குற ஜாதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment