20 May 2009

கேடு கெட்ட உலக நாடுகள்


சரியாக 33 வருடங்களுக்கு முன்னாள் மே 5, 1976 தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்எனும் இயக்கத்தை ஆரம்பித்தார் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன் மக்களுக்குசம உரிமை கிடைக்காததன் காரணமாக , அவர்கள் அடிப்படை உரிமைகள்பறிக்கப்பட்டதன் காரணமாக , சட்டப்படி இதற்க்கெல்லாம் தீர்வுகிடைக்காததன் காரணமாக ஆயுதம் ஏந்திய போரை ஆரம்பித்தார். அப்பொழுது
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் சின்னத்தையும் வெளியிட்டார். அதில் புலிவெறிகொண்டு வெளியில் வர துடிக்கும். இரண்டு துப்பாக்கிகள். அதனைசுற்றியும் 33 தோட்டாக்கள் இருக்கும். அது வெறுமனே அந்த 33 தோட்டாக்கள் ஒருதலைமுறையை குறிக்கும் குறியீடு.


33 வருடங்கள் ஒரு இயக்கம் ஒரு போர் புரிய முடிகிறதென்றால் அந்தஇயக்கத்தின் நியாயத்தை உலகநாடுகள் தெரிந்து கொண்டு அவர்களுக்குநியாயம் செய்திருக்க வேண்டும். உண்மையில் இது உலக நியாயம் தான். எந்த ஒரு இயக்கம் ஒரு தலைமுறை போராடுகிறதோ அதைஅங்கீகரிக்கவேண்டும் என்பது உலக நாடுகளின் விதி. அதனால் தான் 33 தோட்டாக்களை கோடியில் வரைந்தார். இது 33 வது வருடம். ஆனால் இந்தவிதியை கேடு கெட்ட இந்த உலக நாடுகள் செய்ய தவறிவிட்டன.


தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு அறிவிக்கிறது. உண்மையில் பிரபாகரன் என்பது தனி மனிதன் அல்ல. அது ஒரு இயக்கம். ஒருசக்தி. எங்கெல்லாம் தன் மக்களுக்கு அநீதி நடக்கிறதோ அங்கு யாரெல்லாம்அதை எதிர்த்து போர் புரிகிறார்களோ அவர்களெல்லாம் பிரபாகரன் தான். அதனால் தான் சொன்னேன், தலைவர் பிரபாகரனுக்கு மரணம் இல்லை என்று.


ராஜபக்ஷே விமானத்தில் இருந்து இறங்கி தன் மண்ணுக்கு முத்தமிடுகிறார். வெற்றியின் செய்தி ஊருக்கு தெரிவிக்கும் முறையாம். வேகமாக முகத்தைஎடுத்துவிட்டார். இல்லை என்றால் பூமி தன் பங்குக்கு அவர் முகத்தில் காரிஉமில்ந்திருக்கும். நிலம் நீரால் ஈரமாகலாம். நீயோ என்னை குரிதியாலல்லவா ஈரமாக்கி இருக்கிறாய் என்று.


1 comment:

நா.பூ.பெரியார்முத்து said...

உங்கள் பதிவின் இடையில் இந்த இடுகை பாராட்டுதலுக்குரியது தமிழா, நீ வென்ரே தீரவேண்டும் தோழா

Post a Comment