6 December 2008

திருமணத்திற்கு முன்

இந்தியாவில் சில காளமாகவே விவாதத்திற்கு உண்டான பிரச்சினை திருமணத்திற்கு முன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்வது சரியா அல்லது தவறா என்பது.


இந்த விவாதத்தில் சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ தன் கருத்துக்களை சொல்லி பெரிய பிரச்சினையை சந்தித்தார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இது நம் ஊரில் இல்லை என்று பலபேர் பிரச்சினை செய்தார்கள். இப்போது காதலிக்கும் அனைவரும் முதல் இரவில் செய்வதை அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே செய்து விடுகிறார்கள். பணம் படைத்தவர்கள் ரூம் போட்டு செய்கிறார்கள். பணம் இல்லாதவன் பீச்சிலும், பார்க்கிலும் வேறு சில இடங்களிலும் செய்கிறார்கள். இதில் இரண்டு வகைகள் தான். வாய்ப்பு கிடைத்தவன். வாய்ப்பு கிடைக்காதவன். நம்ம நாட்டை பொறுத்தவரை நம்ம பசங்க சைக்கிள் காப்பில் புல் டௌசர் ஓட்டிட்டு போயிடுவாங்க. அப்பறமா அது தப்புன்னு சொல்லிடுவாங்க.


வெளிநாடுகளில் இந்த தலைப்பை அவர்கள் எப்போதோ விவாதித்து அதற்க்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்கள். என்ன முடிவு என்கிறீர்களா, தான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரிடம் அல்லது வேறொருவரிடம் திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்வது ஒன்றும் தவறில்லை என்று. அதனால் அவர்களுக்கும் இதற்க்கு சம்பந்தம் இல்லை.

அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் எதற்கு குறிப்பிட்டீர்கள் என்கிறீர்களா. இதோ வருகிறேன். நம் நாட்டை பொறுத்த வரை திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்ளுங்கள் அல்லது திருமணத்திற்கு பின் உறவு வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் வெளி நாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தால் திருமணத்திற்கு முன் ஒரு முறை யாவது உடல் உறவு வைத்து கொள்ளுங்கள் என்று நான் சொல்ல வில்லை.

கீழே இருக்கும் இந்த வீடியோ சொல்லுது. சந்தேகமிருந்தால் அதை க்ளிக்கவும்.

3 comments:

ஆட்காட்டி said...

??

தமிழ் தோழி said...

:))

Inspector Clouseau said...

Nice work. I came across your blog while blog surfing using the “next blog” button on the Nav Bar of blogger.com. I am continually fascinated by the types of blogs that exist on the Internet, and the various, creative ways in which people all over the globe express themselves. Thanks for sharing.

Post a Comment