18 December 2008

கவிதை ஒரு மருந்து - தொடர்ச்சி

இப்படித்தான் ஜனிக்காமல்
கனியாய் பிறக்காமல்
இலையாய் வடிவு கொண்டதை எண்ணி
என்றேனும் அழுதாயோ இழையே ?

இழை சொன்னது,

நல்ல வேளை நான் மலரில்லை
தேனீக்கள் என் கர்ப்பை திருடுகின்ற தொல்லை இல்லை.
நல்ல வேளை நான் கனி இல்லை
கிளிக்கூட்டம் என் தேகம் கிழிக்கின்ற துன்பம் இல்லை .


இத்துடன் இந்த கவிதை முடியவில்லை. இதன் தொடர்ச்சி, அடுத்த பதிவில் நீங்கள் படித்து ரசிக்கலாம்.


இப்படித்தான் இதற்க்கு முன் என் பதிவில் இருந்து இருக்கும். அதன் தொடர்ச்சி என்னவெனில் இந்த கவிதை நான் சிந்தித்து எழுதிய கவிதை இல்லை என்பதை சொல்லுவதற்க்கே ஆகும். இந்த ஜென்மத்தில் இப்படி அழகாக சிந்தித்து இவ்வளவு அருமையாக எழுத முடியாது . அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் முயற்சிக்கிறேன். பிறகு இது யாருடையது என்று கேட்க்கிறீர்களா.

வேறு யார் உடையது . எல்லாம் நம் வி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் சில.

இருந்தும் இதை படித்து, என்னையும் ஒரு அழகான கவி என்று நினைத்தவர்களுக்கு நன்றி.

1 comment:

Post a Comment