30 July 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - லொள்ளு

ஹாய் நான் கார்த்திக். நான் சினமாவுல உதவி இயக்குனரா இருக்கேன். இந்த உலகத்துல எத்தனையோ அழகான, சூப்பர் பிகுருங்க இருந்தும் நான் ஏன் சுமார கூட இல்லாத ஜெஸ்ஸி யை காதலிக்கணும். இதுக்கு இதுவரை கூட எனக்கு விடை கிடைக்கலை. ஒரு பொன்னை பார்த்தவுடனே அந்த காதல் நம்மள போட்டு அடிக்கணும், தாக்கனும், நம்மள அப்படியே பொரட்டி போடணும். அது மாதிரி இருந்தது ஜெஸ்ஸி யை நான் முதல் முதல்ல பார்த்தப்ப. அவ என்னை கடந்து போகும் போது என்னை மட்டும் இல்லாம என்னோட கொடலை கூட பொரட்டி போட்டது அவ போட்டுகிட்ட அந்த சென்ட். அவ முன்னாடி எந்த பொன்னும் நிக்க மூடியாது. ஏன் ஒரு ஆம்பளை கூட நிக்க முடியாது. அப்படி ஒரு ஸ்மெல்.


ஒரு நாள் என்னோட காதலை அவகிட்ட சொன்னேன். அடுத்த நாளில் இருந்து அவ காணோம். விசாரிச்சதுல சொந்த ஊரான கேரளா போயிருக்கானு தெரிஞ்சுது. நானும் போனேன். மறுபடியும் ஜெஸ்ஸி யை பார்த்து என்னோட காதலை சொன்னேன். இதுக்காகவா கேரளா வந்தேன்னு கேட்டா. இல்லை நாலாயிரம் கடன் வாங்கிகிட்டு கொலா புட்டும், நேந்திர பழம் சிப்ஸ் சாப்பிட வந்தேன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு கேரளா வரணும். சென்னை லையே அம்முகுட்டி சிப்ஸ் கடைல கிடைக்குமே, நியர் கோடம்பாக்கம் நு அவ சொன்னா. நான் ஒரு மொக்கை போட்டேன். பதிலுக்கு அவ ஒரு மொக்கை போட்டா. எதோ ஒன்னு எங்களை ஒன்னு சேர்க்குது. அதுக்கப்புறம் ஜெஸ்ஸி எனக்கு நிறைய அட்வைஸ் செஞ்சா. என்ன விட அவ ஒரு வயசு பெரியவலாம் . இதுல என்ன இருக்கு. நோ ப்ராப்ளம் நு சொன்னேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. நிறைய பிரச்சினை வரும் வேண்டாம், நன்பர்களாவே இருப்போம்னு சொன்னா. அப்பறம் ஒன்னு சொன்னா, நீ தான் கார்த்திக் எனக்கு ப்ரபோஸ் பண்ண முதல் ஆள் நு. அது எனக்கே தெரியுமுன்னு மனசுக்குள்ளே நினைசிகிட்டேன். ஏன்னா என்ன விட ஒரு கேன பயல் இந்தியாவுலையே இருந்து இருக்க மாட்டான். சரி நண்பர்கள் ஆகி அப்புறம் எப்படியாவது காதலை ஏத்துக்க வெச்சிடலாமுன்னு நினைசிகிட்டு சென்னை வந்துட்டேன். இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும் .


அப்புறம் ஒரு நாள் எனக்கு ஜெஸ்ஸி போன் செஞ்சி நாம ரெண்டு பெரும் எங்கயாவது போலாம். மாயாஜால் போகலாமுன்னு சொன்னா. ரெண்டு பெரும் போனோம். நிறைய அவளுக்காக பர்ச்சேஸ் செஞ்சிகிட்டா. லிப்ஸ்டிக், மேக் அப் செட், டிரஸ் இன்னும் நிறைய. சரி போகட்டும் கடைசியில படம் பார்க்கும் பொது எதனா பண்ணிக்கலாமுன்னு நினைச்சி அமைதியாய் இருந்தேன். நான் ரெண்டு பெரும் உள்ளே இருக்கோம். இன்னும் படம் போடலை. கார்த்திக் இதுதான் நான் பார்க்குற ஆறாவது படம் தெரியுமா நு ஜெஸ்ஸி சொன்னா. பரவா இல்லை எனக்கு முன்னாடி அஞ்சி பேரு ஏமாந்து இருக்காங்க. படம் போட்டாங்க. சினமா திரை வெளிச்சம் அவ முகத்துல பட்டதும் பேய் மாதிரி இருந்தா. அப்பறம் எங்க கை வெக்கிறது. இறுதியா கொண்டு போயி அவ தெரு மொனயில விட்டேன். எனக்கு இழப்பு பத்தாயிரம். கடைசியா ஜெஸ்ஸி ஒன்னு சொன்னா. கார்த்திக் நாம நன்பர்களாவே இருந்துடுவோம். இப்ப இருக்குறா மாதிரி, எங்கே வேனுமுன்னாலும் சுத்தலாம். படம் பார்க்கலாம். காதல் வேணாம் கார்த்திக். எதுக்கு வாரவாரம் பத்தாயிரம் செலவு வைக்கறதுக்கா. இதை காத்தாலேயே சொல்லி இருந்தா எனக்கு பத்தாயிரம் மிச்சம் ஜெஸ்ஸி நு சொல்லிட்டேன். எங்க ரெண்டுபேருக்கும் சண்டை ஆயிடிச்சி. அவ அழுதுகிட்டே போயிட்டா. போகும் போது ஐ ஹேட் யு கார்த்திக் நு சொல்லிட்டு போயிட்டா. கோபத்துல அவ வாங்கின பொருள் திருப்பி தந்துடுவான்னு நினைச்சேன். அப்படி தந்தா திருப்பி குடுத்து பாதி காசு கடையில இருந்து வாங்கிடலாமுன்னு நினைச்சேன். அதனை சண்டைளையும் அந்த பர்சேஸ் பேக் விடவே இல்லை.
நாங்க தெருவுல சண்டை போட்டது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சி அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. நானும், கல்யாணத்துக்கு போனேன். ஜெஸ்ஸி யை பார்க்க இல்லை. என்னை விட ஒரு கேன இந்த உலகத்துல இருக்கானு தெரிஞ்ச அவனை பார்க்கணுமுன்னு நம்ம அடி மனசு பிராண்டும். அதான் நான் போனேன். கடைசியில அவனை ஜெஸ்ஸி க்கு பிடிக்கலை நு சொல்லிட்டா. இப்பவும் எனக்கு அவனை பார்க்கணுமுன்னு தோணுது. ஜெஸ்ஸி மூஞ்சிக்கே அவனை பிடிக்கலைன்னா அவன் எவ்வளவு கேவலாமா இருப்பான்னு நீங்க யோசிச்சி பாருங்க. ஜெஸ்ஸி என்ன அங்க பார்த்தா. எங்க காதல் மறுபடியும் ஆரம்பிச்சி கொஞ்ச நாள் தொடர்ந்தது.


ஒரு நாள் ராத்திரி ஜெஸ்ஸி போன் செஞ்சி இங்க எதுவும் சரியில்லை, நீ இங்க வா நாம எங்கனாச்சும் போகலாமுன்னு அழுதுகிட்டே சொன்னா. நான் பதறி அடிச்சிகிட்டு போனேன். ரெண்டு பெரும் ஸ்பென்சர் போனோம். ஒரு டேபிள் ல உட்க்கார்ந்தோம். ரொம்ப சோகமா இருந்தா. எப்படி ஆரம்பிக்கலாமுன்னு தெரியாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு இருந்தோம். ஆர்டர் கேட்டு ஒரு பையன் வந்தான். என் கிட்டே காசு இல்லாததால ஒரு ஜூஸ் சொன்னேன். ஒன்லி ஜூஸ் வித் டூ கிளாஸ். திடீர்னு ஜெஸ்ஸி எழுந்து அங்கிருந்து வேகமா கிளம்ப ஆரம்பிச்சா. எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியலை. பின்னாடியே போய் என்னன்னு கேட்டேன். எங்க வீட்டுல சமையல் சரியில்லைன்னு உன்னை கூட்டிகிட்டு ஸ்பென்சர் வந்தா நீ என்னடானா வெறும் ஜூஸ் சொல்லுற. அதான் நான் ஆரம்பத்துலையே சொன்னேனே நம்ம ரெண்டு பேருக்கு செட் ஆகாதுன்னு. சரி வா இப்போ வாங்கி தரேன்னு சொன்னேன் அவ ஒத்துக்கலை. இப்போ நான் அந்த நிலைமைலே இல்லைன்னு சொல்லி போயிட்டா. நான் கூட வீட்டுல சரியில்லை நு சொன்னதும் எதோ பிரச்சினைன்னு நினைச்சேன்.சமையல்தான் பிரச்சினையா. இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும்.
அதுக்கு அப்பறம் அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னு தெறிஞ்சது. அவன் எதோ பைவ் ஸ்டார் ஹோட்டல் ல முக்கியமான கூக்காம். எப்படியோ கடவுள் என்னை காப்பாத்திட்டாரு. இருந்தாலும் எத்தனையோ பொண்ணுங்க இருதும் நான் ஏன் ஜெஸ்ஸி யை காதலிக்கணும். ( நீங்க அசிங்கமா திட்டுறீங்க எனக்கு கேக்குது)

2 comments:

Mohamed Faaique said...

ஜெஸ்ஸி:நான் ஏன் கார்த்திக்கை காதலிச்சேன்? உலகத்துல எத்தனையோ கேனயனும் வடி கட்டின முட்டாள்கள் இருந்தும் அவனா மாதிரி ஒருத்தன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்...

Jaffer said...

நல்ல காமெடி, keep doing ..

Post a Comment