31 December 2010

ஒரு கை சோர் ஆயின் ஊருக்கு கொடுப்போம்.

நான், என், என்ற எண்ணத்தை எடுப்போம்,
ஒரு கை சோர் ஆயின்  ஊருக்கு கொடுப்போம்.
மனிதனை  தீண்டா மதம் யாவும் வெறுப்போம்,
இறைவன் செய்யும் தீவிரவாதம் ஒழிப்போம்.
நிறபேதம் செய்பவரை  பிடிப்போம்,
அன்பினால் அனைவரையும் அனைப்போம்.
வறுமை, ஏழை, பட்டினி என்பது,
இறந்த காலமென படிப்போம்.
உலகில் பிறந்தது வாழ்வை ரசிக்க,
எதற்கு யுத்தம்  செய்து இறக்க.
பிறரிடம் நீ அன்பு கோர்,
பிறருக்கு நீ அன்பு செய்,
வாழும் அத்தனை நாளும்
அணுவணுவாய்  இன்பம் செய்.

இப்புத்தாண்டு முதல்.

28 December 2010

குட்டிக் கவிதைகள்

காமம்

காமம், இச்சை தீற காதல் வேஷம் தறிக்கும்.
உலகில் காதல் தனிச் சொல் அல்ல.
அது அரிதாரம் பூசிக்கொண்ட வக்கிரச் சொல்.
கருத்த, இளைத்த, ஆணிடம் பெண்,
பெண்ணிடம்  ஆண்,
முதல் காதல்க் கொள்ளாததே சாட்சி.

************************************
மனிதன்

புலி ஊருக்குள் புகுந்தது என்றார்,
யானைகள் வீதிகளில் வருது என்றார்,
பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது என்றார்,
கானகம் அழித்து அங்கே
ஊரை உருவாக்கிக்கொண்ட மனிதர்கள் .

************************************* 

அவள் மனம்


அவள் கூந்தல் வழி வீழ்ந்த பூ ஒன்று
என் ரகசிய பொருள் ஆனது.
அது நொடிக்கொரு வாசம் வீசுகிறது.
மல்லிகை வாசம்,
அடுத்த நொடி ரோஜா,
...பின்னொருமுறை செம்பருத்தி.
விந்தை என்னவெனில்
அது நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது
ஐந்தாண்டுகள் ஆகியும்.

27 December 2010

நாட்டை அளிப்போம்...கட்சி வளர்ப்போம்....

மன்மோகன் சிங்க் - மேடம் நாம எதுக்கு ஜே பி சி கமிட்டி வைக்க கூடாது. மக்கள் நம்மள ரொம்ப கேவலமா திட்டுறாங்களே. சின்ன குழந்தைல இருந்து பெருசு வரைக்கும் எல்லாருமே நம்மள ஊழல் கட்சின்னு பேசறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால சுத்தமா வெளியில போக முடியலை. எல்லாரும் நான் தான் பிளான் போட்டு பண்ணினதா பேசிக்கறாங்க. நான் என்ன செய்யட்டும்.சோனியா - அர்ஜுனா, சாரி மன்மோகன் ஒரு விஷயம் நன்றாக நினைவில் வை. இங்கே நம் நாட்டில் நம் கட்சி தலைமையில் நடக்கும் எந்த ஊழலுக்கும் நீ காரண கர்த்தா அல்ல. நீ வெறும் அம்பு தான். எய்தவன் நான் தான். நீ வெறுமனே கருவி. நான் தான் அதன் கர்த்தா. நீ உன் கடமை மட்டும் செய். நான் எழுதி குடுக்கும் காகிதத்தில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் சென்று மீடியா முன் படி. அது போதும். நியாயம், அநியாயம் என்று நீ சிந்திக்காதே. 2001 பி ஜே பி ஆட்சியில் ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் கோடி அரசுக்கு நட்டம் என்று ஒரு அறிக்கை படித்தேன். இது ஒன்றும் தவறு இல்லை. அவர்கள் கட்சி காப்பாற்றுவதற்கு அடித்தார்கள். கொண்டு பொய் சுவிஸ் வங்கியில் போடவில்லையா. அது போல தான், நாம் அடித்த தொகையும். எல்லாம் நம் கட்சியை இன்னும் ஐம்பது வருடங்கள் காப்பாற்றுவதற்கு தான் புரிந்ததா. எதோ நம் புண்ணியம் தி.மு.க கட்சி நம் கூட்டாளியாகவும் ஏ. ராசா டெலிகாம் மந்திரியாகவும் இருந்ததால் நமக்கு பல ஆயிரம் கோடி வந்து சேர்ந்தது. எதோ நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். அதை அனுபவிப்பாயா அதை விட்டு விட்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டு இருக்கிறாய். மக்கள் என்கிறாயா அவர்களை கணக்கில் கொள்ளாதே. அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினை, இந்த ஊழலை அதிகம் சொன்னால் ஒரு வாரம் பேசுவார்கள் பிறகு அவரவர் வீட்டு பிரச்சினை வந்துவிடும். நம்மை மறந்து விடுவார்கள் . மீடியா என்கிறாயா அவர்கள் நம் செல்ல பிள்ளைகள், ஒரு பெட்டி குடுத்தால் அவர்களே நம்மை பாராட்டி இரண்டு நாள் தொடர்ந்து நம்மை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆகையால் நீ அவர்களை பற்றியும் பயப்பட தேவை இல்லை. ஊளை செய்வது என்பது அனைத்துக் கட்சி தர்மம். அதை எந்த கட்சியும் ஆட்சேபிக்காது. எதற்க்காக மாட்டுகிறோம் என்றால் எதிர் கட்சிக்கு குடுக்க வேண்டிய பங்கை குடுக்காமல் போனபோது. ஆகையால் அதையும் நானே பார்த்துக்கொள்கிறேன். நீ உன் தர்மத்தை செய். நீ வெறுமனே பொம்மை.நான் தான் உன்னை ஆட்டி வைக்கும் கர்த்தா. உன் பங்கு இந்நேரம் சுவிஸ் வங்கியில் விழுந்து இருக்கும். சந்தோசமாக குடும்பத்துடன் என்ஜாய் செய்துக்கொள். மடையர்களான மக்களை நினைக்காதே. எனக்கும் நினைவு படுத்தாதே. வெளியில் மீடியா ஆட்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த காகிதத்தில் இருப்பதை படித்து அதை அப்படியே ஒப்பித்துவிடு. சரியா...மன்மோகன் - சரி கிருஷ்ணா.....மன்னிக்கவும் மேடம்....