21 October 2010

மல்லிகா செராவத் ஆபாசம்

இன்னைக்கு ஒரு தமிழ் இதழில் ஒரு சுவாரஸ்யமான ஒரு செய்தியை படிச்சேன். அதாவது ஹிந்தி நடிகை மல்லிகா செராவத்  ( அருமையான நடிகை) கவர்ச்சியாக நடிப்பதால் இளைய சமுதாயம் கெட்டுப்போகிறது என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் ஒருவர் . இதை படிக்கும் போதே நினைத்துக்கொண்டேன்.  ஏன்டா உங்களுக்கு வேற வேலை இல்லையாடா. இதெல்லாம் ஒரு வழக்கு. ஏன் மல்லிகா செராவத் முன்னாடி யாரும் கவர்சிய நடிக்கலையா. அப்பவெல்லாம் இளைய சமுதாயம் கெட்டு போகலையா.  ஆனாலும் எதுக்கு இப்படி செயரானுகன்னு யோசிக்கும் போது எனக்கு சில விஷயங்கள் தோணுது.

இந்த  வழக்கு போட்டவர் கட்டாயம் அறுவது வயது கிழவராக இருக்க வேண்டும். எதோ ஒரு தொலைக்காட்சியில் மல்லிகா நடித்த காட்சியோ அல்லது பாடலோ பார்த்திருக்க வேண்டும்.  ஆஹா இந்த மாதிரி எங்க காலத்தில எல்லாம் இல்லையே. இந்த இளைய சமுதாயத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பா. இந்த காலத்து பசங்க இவ்வளவு சந்தோசமா இருக்கனுகளா. எங்க காலத்துக்கு கிடைக்காதது எந்த காலத்துக்கும் கிடைக்க கூடாது என்ற வயிற்று எரிச்சலில் அடுத்த நாளே ஒரு பொது நல வழக்கு தொடுத்து அதற்க்கு இளைஞர்கள் மேல் பலி போட்டு விடுவது.  இவர் இளைஞர்கள் மத்தியில் சென்று நான் மல்லிகா செராவத் ஆபாசமாக நடிக்கிறார் என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இதெல்லாம் நீங்கள்  கெட்டு போக கூடாது என்று தான் என்று சொல்ல சொல்லவும். அதன் பிறகு அவர் வீடு போக மாட்டார். மருத்துவமனை தான் செல்ல வேண்டும்.

ஏன்டா எதோ மல்லிகா செராவத் மாதிரி சில பேரால சில சின்ன, சின்ன சந்தோஷம் கிடைக்குது.  அதையும் கெடுக்க கோர்ட் வரை போறீங்களா. நல்லா இருங்கடா, நல்லா இருங்க.

பொது நல வழக்கு போட எத்தனையோ உண்மையான பிரச்சினைகள் இருக்கு. அது மேல ஒரு பொது நல வழக்கு போடலாமே. உதாரணத்துக்கு சில சேனா கட்சிகள் இளைஞர்களை தவறான பாதையில் கொண்டு செல்கிறார்கள் என்று கட்சியின் தலைவர் மேல் ஒரு வழக்கு தொடரலாமே. இவர்களால் முடியாது.  ஏன் என்றாள் அப்படி இவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தால் வழக்கு போட்டவரை கோர்ட் வாசலில் படுக்க வைத்து துணிகளை அவிழ்த்து ஜட்டி கிளியும் வரை அடிப்பார்கள். இப்படி உண்மையான எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

மல்லிகா செராவத் நடிக்கிறாங்க, நாங்க பார்க்கறோம். இடையில உனக்கு என்னடா போச்சி. இளைஞர்கள் எல்லாம் உன் வீட்டு வாசல்ல வந்து உட்க்கார்ந்து நாங்க கெட்டுப் போறோம். எங்கள காப்பாத்துங்கன்னு கேட்டோமா. மூடிகினு போக வேண்டியது தானே.

கம்ப்யூட்டர் வந்துடிச்சி. மல்லிகா செராவத் காட்டாத கவர்ச்சியெல்லாம் அங்க பார்க்கலாம். அதானால இந்த விளம்பரத்துக்காக சீன் போடறதெல்லாம் வேணாம். போயி வேற வேலை இருந்தா பாருங்க. எதுக்கும் உங்க பைய்யன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாருங்க. கம்ப்யூட்டர் ல பிகினி போட்ட ஏஞ்சலினா ஜூலியை  பார்த்துகிட்டு இருக்க போறான். 

இப்ப எதுக்கு தேவ இல்லாம் இந்த பதிவு. அது வடக்கு. எங்களுக்கு எதுக்கு சொல்லுறேன்னு கேட்கறீங்களா இங்கே யாரும் நமீதா மேல கேஸ் போட கூடாது பாருங்க. எல்லாம் முன் எச்சரிக்கை.

இப்படிக்கு
தீவிரமான மல்லிகா செராவத் மற்றும் நமீதா ரசிகர்களில் ஒருவன்.

நமிதா ரசிகர்கள் எல்லாம் திரளாக  வந்து வோட்டு போடவும். 

2 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் ஆதங்கம் நியாமானதுதான் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

mythees said...

:)

Post a Comment