22 November 2008

ஆட்டோ - கிராப்

தன் நண்பனுடன் அந்த வீட்டுக்கு செல்கிறான். ஒரு சின்ன ஒட்டு வீடு. அதில் தான், அவன் சிறு வயதில் காதலித்த பெண் இருக்கிறாள். அவளுக்கு தன் திருமண அழைப்பிதல் தருவதற்கு சென்றிருக்கிறான். தன் நண்பன் அந்த பெண்ணை அழைக்கிறான். அவள் வெளியில் வருகிறாள். கையில் ஒரு குழந்தையும் , உடன் இரண்டு குழந்தைகளுடன் அவனுக்கு காட்சி அளிக்கிறாள். அப்போது அவள் கேட்க்கிறாள்.

பெண் - யார் வேணும் உங்களுக்கு ?

ஹீரோ - நான் தான் கதிர், என்னை ஞாபகம் இருக்கா

பெண் - கதிரா நீ எவ்வளவு அசிங்கமா இருந்த, இப்போ அழகா தெரியற.

ஹீரோ - நீ எப்படி இருக்கற ( ஏக்கமாக )

பெண் - நல்லாத்தான் இருக்கறேன் .

ஹீரோ - பொய் சொல்லாதே. இதே என்னை கல்யாணம் பண்ணி இருந்தா

பெண் - மூணு புள்ளைங்க பதிலா, ஆறு புள்ளைங்க இருக்கும். அவ்வளவு தானே.

ஹீரோ- உன் புருஷன் வீட்டுல இல்லையா.

பெண் - எதுக்கு, அவரு வீட்டுல இல்லன, நீ வீட்டுல பூந்து எதன பன்னலாமுனுன்னு பார்க்கறியா. பிஞ்சிடும். ஜாக்கிரதை.

ஹீரோ- நா அதுக்கு கேக்கலை

பெண் - நீ எப்பேர்பட்ட ஆளுன்னு எனக்கு நல்லா தெரியும். மரியாதையா அந்த என்னத்தை குழி தோண்டி பொதச்சிடு.

ஹீரோ - எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்.

பெண் - ஆச்சர்யமா இருக்கு, இத்தன நாளா நீ கலயாணம் பண்ணாம இருந்து இருக்கே.


ஹீரோ - உனக்கு அப்புறம் லத்திகா நு ஒரு பொன்னை லவ் பண்ணேன்.

பெண் - அதானே பார்த்தேன். நீ சும்மா இருக்கற ஆளா.

அதற்குள் அந்த பெண் கணவர் வந்து விடுகிறார்.

கணவன் - யார் இவரு ?

பெண் - என் கூட பள்ளிக்கூடம் படிச்சவரு.

கணவன் - அவருக்கு டீ , காபி, எதாச்சும் குடுத்தியா, இல்லையா .

பெண் - அந்த மூஞ்சிக்கி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தண்ணி குடிச்சிட்டான். போதும் விடு.

இரண்டு பேருக்கும் பத்திரிக்கை குடுத்து விடை பெரு முன்.

ஹீரோ - நீ வரும் போது உன் புருஷனை என்றதும்

பெண் - கண்டிப்பா கூட்டினு தான் வருவேன். உன்னை எல்லாம் நம்பி தனியா வரமுடியுமா. போ போ.

******************************************

அங்கிருந்து நேராக கேரளாவில் உள்ள லத்திகாவின் வீட்டுக்கு போகிறார்கள். உள்ளே சென்றது அவனுக்கு அதிர்ச்சி. அவள் விதவை கோலத்தில் நிற்கிறாள்.
அவள் அழுது கொண்டே அவனை பார்க்கிறாள். அவன் சோகமாக அவள் அருகில் சென்று, அவள் மூக்கின் மேல் விரல் வைத்து இப்படி கேட்டான்.

ஹீரோ - எனக்காக குத்திகிட்டியே அந்த வைர மூக்குத்தி எங்க

லத்திகா - நீ இப்படி கண்ணை துடைக்கிற சாக்குல மூக்குத்திய திருடிருவேனு தெரிஞ்சி தான், நான் போட்டு இருந்த அத்தனை நகைகளையும் பீரோ வுல வெச்சி பூட்டிட்டு வந்து இருக்கிறேன். என்று அழுது கொண்டே சொன்னால்.

ஹீரோ - எப்படி ஆச்சி இதெல்லாம் .

லத்திகா - என் கல்யாணத்தை பார்த்து நீ அலுதுகுனே போயிருப்பே. அதான் என் புருஷன் நட்டுக்குனு போயிட்டான்.

ஹீரோ - இப்ப கூட நீ சொல்லு, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.

லத்திகா - என்னை எப்படி வெச்சி காப்பாத்துவே.

ஹீரோ - இவ்வள பெரிய வீடு நிலம் இருக்கே.

லத்திகா - இதெல்லாம் இப்போ அடமானத்துல இருக்கே.

ஹீரோ - அப்படியா. சரி வேண்டாம். நீயே ரொம்ப கஷ்டத்துல இருக்கே. இப்ப நான் உன்னை இதை கேக்கக்கூடாது.

லத்திகா - அதானே பார்த்தேன் . அடமானம் நு சும்மா சொன்னேன். உன்னை எனக்கு நல்ல தெரியுமே. சரி என்னா விஷயம்.

ஹீரோ - எனக்கு கல்யாணம். நீ கண்டிப்பா வரணும்.

லத்திகா - கண்டிப்பா வருவேன், நீ எந்த பொன்னை ஏமாத்தி இருக்கேன்னு பார்க்கணுமே.

ஹீரோ - நான் வேணுமுன்னா உன்னை ரெண்டாவது வீடா வெச்சிக்கவா.

லத்திகா - மரியாதையா போயிடு. இல்லனா வெளியில இருக்குற யானைய வெச்சி மிதிக்க வெச்சிடுவேன்.

அங்கிருந்து தலை தெறிக்க ஓடுகிறான் ஹீரோ.

( பின் குறிப்பு - உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத படத்தில் இருந்து கட்சிகளை பரிந்துரைங்கள். நீங்களே கூட லொள்ளு செய்து அனுப்புங்கள். எந்த லொல்லா க கூட இருக்கலாம். அதை புது பதிவுகளாக போடப்படும். )

2 comments:

Anonymous said...

வழிப்போக்கரே, அழைப்பிதல் அல்ல அழைப்பிதழ். உங்க லொள்ளு கலக்கப்போவதா? அசத்தப்போவதா?

வால்பையன் said...

நல்ல நகைச்சுவை,
லொள்ளுலயே கலக்குரிங்க

Post a Comment