29 August 2009

ஆண் அடிமை ஆனான்

திருமணத்தால் பென்களுக்கு சுதந்திரம் பறிபோகிறது. அவள் தன் சொந்த இருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு கணவன் என்ன சொல்கிறானோ அதை செய்கிறாள். என்றொரு பொய் பிரச்சாரம் இங்கே இருக்கிறது. உண்மையில் ஆன்கள் அதே திருமணத்தால் அடிமை ஆக்கப்படுகிறார்கள். தாலி கட்டும் நாள் முதலே பெண் அவனை ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்கிறாள். சரி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

1 . தாலி கட்டும் நேரத்தில் பென் ஜம்பமாக உடக்கார்ந்துக் கொள்கிறாள். மாப்பிள்ளையோ பாவம் மரியாதையாக அவளுக்கு குனிந்து தாலி கட்டுகிறான். இங்கே ஆரம்பிக்கிறது ஆன் பென்னுக்கு ஆமாம் போடுகுற வேலை. இங்கே குனிந்தவன் பாவம் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்து விடுகிறான்.

2. ஓமத்தை சுற்றி வருகிற அந்த வழிபாட்டில் ஆன் மகன் முன்னே செல்லவேண்டும். பென் பின்னால் வருவாளாம். எதற்கென்று தெரியுமா ஒரு வேலை எதவாது பிரச்சினை என்றாள் முதலில் ஆன் விழுந்து விடுவான். அதன் பிறகு பென் உஷாராக தப்பித்து விடுவாள். எல்லாம் பென்களின் முன் எச்சரிக்க்கை.

3. ஆன் பகலெல்லாம் வேலை செய்து வரவேண்டுமாம். பென் மட்டும் வீட்டில் சமையல் செய்யவேண்டுமாம். எல்லாம் இப்போது குக்கர் செய்கிறது. சாப்பாட்டிற்கு கரு குக்கர், காய்கறி வேகவைக்க ஒரு குக்கர், என்று அனைத்திற்கும் குக்கர் வந்துவிட்டது. இது ஒரு சாக்கு இவர்களுக்கு. அணைத்து வேலைகளும் 11 மணிக்கு முடிந்துவிடும். பிறகென்ன மெகா தொடர்கள். ஏன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக சமைத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலை செய்வது என்னமோ சுலபம் என்றும் வீட்டு வேலை கஷ்டம் என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவர்கள். நாம் அதை நம்பக்கூடாது.

4. எதற்காக பிறக்கும் குழந்தைக்கு முதலில் அம்மா என்று சொல்லித்தரவேண்டும். ஏன் அப்பா என்று சொல்லிதரக் கூடாதா. அதுவும் ஒரு முன்னெச்சரிக்கை. பென்களின் ஆதிக்கம்.

5. குழந்தைக்கு காதுகுத்து விழாவில் ஏன் பெண்னின் அண்ணன் அல்லது தம்பியின் மடியில் வைத்து குத்தவேண்டும். ஏன் நம் தம்பி அல்லது அண்ணன் மடியில் மேல் வைத்து குத்தினால் ஊசி உள்ளே இறங்காதா. இங்கேயும் பென்னாதிக்கம்.

இது வெறும் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இனிமேல் ஆன் ஆதிக்கம் என்று எந்த பென்னாவது சொன்னாள் நீங்கள் இதை எல்லாம் எடுத்து கூறுங்கள். (முடிந்தாள் குறையுங்கள்)



பின் குறிப்பு - சும்மா இது வெறுமனே நகைச்சுவைக்காக எழுதினது.





1 comment:

Post a Comment