3 December 2009

சாரு நிவேதிதாவின் ஜால்ரா

நேற்றைக்கு சாரு இணைய தளத்தில ஒரு பதிவு லிங்க் கொடுத்திருந்தார். அந்த பதிவானது சாரு வுக்கு சொம்பு தூக்கிய ஒரு பதிவரின் பதிவு . சாருவுக்கு தான் யார் தனக்கு சோம்பு தூக்கினாலும் அதன் பின்புலம் யோசிக்காமலே அதை தன இணையதளத்தில் போட்டு விடுவாரே அதை போன்றது தான் இந்த பதிவும். அந்த பதிவில் எழுதபட்டதாவது கமல் அமீருக்கு உலக சினிமா பார்க்க சொன்னதால்தான் யோகி போன்ற படம் பண்ணியதாகவும் அது ஒரு ஆங்கில பட தழுவல் என்றும் சொல்லி இருக்கிறார். உலக சினிமா பார்க்க சொல்லி அமீரை கமல் கெடுத்து விட்டார் என்று சொல்லி இருந்தார்.

சாருவுக்கு சோம்பு தூக்கும் நண்பரே நீங்கள் தொடர்ந்து சாருவை படித்து வருகிறீர்களா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட பதிவில் அமீருக்கு உலக சிமென தெரியாதென்றும் அதை சசிகுமார் தான் தன்னை உலக சினிமா பார்க்க சொல்லி அகிரா குரோசவா போன்ற படங்களை தந்து பார்க்க சொன்னார் என்றும் அமீர் சொன்னதாக சாரு தன் வலைத்தளத்தில் எழுதி இருந்தார். உலக சினிமா பார்த்தால் அதை அப்படியே திருட வேண்டும் என்று பொருள் அல்ல. சசிகுமார் உலக சினிமா பார்ப்பவர்தான் அவர் ஒன்றும் தரமற்ற சினிமா எடுக்கவில்லையே. சாருவின் பேச்சை கேட்க்காமல் கமல் பேச்சை கேட்டதால் தான் அமீர் இப்படி ஆகிவிட்டார் என்று இவர் சொல்கிறார். சாரு என்ன சினிமாவை கண்டு பிடித்த எடிசனா. அவர் என்ன ஆயிரம் சினிமா எடுத்து சாதனை படைத்தது விட்டாரா. சாருவை பற்றி எழுதினால் பதிவு பிரபலமாகும் என்று உமக்கு தெரிந்து இருக்கிறது. அதிகம் ஹிட்ஸ் வரும் என்று நன்றாகவே தெரிந்து இருக்கிறது. ஆகையால் அவர் புகழ் பாடி எழுதுங்கள் தவறில்லை . ஆனால் அவருக்காக மற்றவர்களை கிண்டல் செய்து பதிவு எழுதுவதை தவிர்க்கவும். உலக சினிமா பார்க்க சொல்வது அவர்கள் எப்படி படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக. அவர்களது எடிட்டிங் முறை, அவர்கள் கேமரா வைக்கும் முறை போன்ற சில விசயங்களுக்காக.

சாருவுக்கு நீங்கள் சோம்பு தூக்க வேண்டும் என்று தோன்றினால் தினமும் காலையில் சென்று அந்த வேலையை செய்யவும்.



No comments:

Post a Comment