30 December 2009

இந்த வருடத்தின் மொக்கைப் படம்















2009 இல் சிறந்த படங்களை வரிசை படுத்தும் வேலையே அத்தனை ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் என்று நமக்கு தெரியும். நானும் அதைத்தான் செய்ய போகிறேன். அனால் அதற்க்கு எதிர்மாறாக இந்த வருடத்தின் ஆக சிறந்த மொக்கைப்படம் எது, அது எதனால் மொக்கை ஆனது என்று பார்ப்போம் .

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஐயோ அந்த படமா என்று அலறிய அந்த படம். பேரை கேட்டாலே சும்மா ஒதுருதில்லே என்று அதிரவைக்கும் படம். வேறு எதுவும் இல்லை ஒன் அண்ட் ஒன்லி " வில்லு " . ஆம் எல்லோருடைய மொத்த ஓட்டுகளும் வில்லுக்கே அளித்து இந்த வருடத்தின் மொக்கை படமாக மாற்றி இருக்கிறார்கள்.

வில்லு படத்தை தியேட்டரில் பார்த்தேன் (விதி வலியது. வேண்டாம் விபரீத விளையாட்டு என்று என் நண்பன் சொன்னான். நான் கேட்கவில்லை ). பிரபு தேவாவின் முந்தைய மூன்று படங்கள் பார்த்ததால் நிச்சயம் பார்க்கும் படி இருக்குமென்று நம்பி உள்ளே நுழைந்தேன். படம் ஆரம்பித்ததும் ஒரு பாட்டு வந்தது. அதில் குஷ்பூ விஜயுடன் நடனம் ஆடும் பாடல். படு மோசமான ஒரு குத்துப்பாட்டு. அப்போதே நான் படத்தை பற்றி கொஞ்சம் சந்தேகித்திருக்க வேண்டும். சுற்றும் பார்த்தேன் அணைத்து கதவுகளும் மூட்பட்டிருந்தன. ஒருத்தனும் தப்பிக்க முடியாது என்று பிரபு தேவா என் காதோரம் வந்து சொல்லுவது போல் தோன்றியது. வேறு வலி இல்லை. பார்த்தே ஆக வேண்டும். நான் மட்டும் அல்ல அனைவரும் என் போன்றஎன்னம் தான் என்று சுற்றிபார்ததும் புரிந்தது. அணைத்து ரசிகர்கள் முகத்திலும் ஈ ஆடவில்லை மாறாக அதிருப்தி தாண்டவம் ஆடியது. எப்போதாவது ஒரு நல்ல படம் தரமாட்டாரா என்று அவர் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். இடைவேளையில் போயிருக்கலாம். சரி பாதி கடல் தாண்டியாகி விட்டது. முழுசாக நூறு ரூபாய்க்கு மேல் செலவு. எப்படி வருவது. ஏசி யில் தூங்கு என்று என் மனம் சொல்லியது.

பிரபு தேவ விஜயை நம்பியதை விட நயன்தாராவையே அதிகம் நம்பி படத்தை ஆரம்பித்திருப்பார் போலும். குடுத்த காசு அதற்க்கு கொஞ்சம் கழித்துக்கொள்ளலாம். மற்றபடி வடிவேலு காமெடி இந்த வருடத்தின் மொக்கை. பாடல்கள் மட்டும் நன்றாக இருந்தது. விஜய் நன்றாகவே ஆடுவார் அதற்காக பொழுதுக்கும் ஆடவேண்டும் என்று அர்த்தமில்லை. அதுவும் அலுத்து விட்டது. ஒரு ஒபெநிங் சாங், ஒரு ஐடெம் சாங். மூன்று லவ் சாங். இதெல்லாம் ஒரு பார்முலாவா. இதன் காரணமாகவே வேட்டைக்காரனை தியேட்டரில் பார்க்காமல் டிவிடியில் பார்த்தேன். வில்லுக்கு வேட்டைக்காரன் சுமார். இப்படி பல காரானன்களால் இந்த படம் சிறந்த மொக்கை படம் என்ற பட்டதை பெறுகிறது.

இந்த வருடத்தில் வேறு மொக்கை படங்கள் இல்லையா என்று பார்த்தால். இருக்கிறது. அனால் மிகவும் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்படுத்தி, எதிர்ப்பார்ப்பை சிறிதளவும் நிறைவேற்றாமல் மக்களை மொக்கை வாங்கவைத்ததால். இந்த வருடத்தின் சிறந்த மொக்கை படம் " வில்லு"

1 comment:

மணல்கயிறு said...

சன் பிக்சர்ஸ் படம் எல்லாமே மொக்கைதானுங்களே வாத்தியாரே..

Post a Comment