12 October 2010

ரஜினியுடன் சாரு

ரஜினியும், சாருவும்  எதோ ஒரு எடத்துல ஒருத்தர ஒருத்தர் பார்த்து பேசிக்கறாங்க. அவங்க எப்படி பெசிக்குவாங்கன்னு  பார்ப்போம். ( அது என்ன ரஜினியும், சாருவும் பேசிக்கணும், கேக்கறீங்களா காரணம் இருக்கு கடைசியில சொல்றேன்.)

ரஜினி - ஹாய் சாரு எப்படி இருக்கீங்க. உங்க ப்ளாக் நான் தினமும் படிக்கறேன்.

சாரு - அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. அப்பறம் நான் நல்லா இல்லை. இந்த மாசம் வாடகை கட்டனும். இன்டர்நெட் பில் கட்டனும். அடுத்த வாரம் பார் ல குடிக்கணும். இதுக்கு நீங்க காசு தந்தா நானும் நல்லா இருப்பேன். நீங்க ஒன்னும் சும்மா தரவேணாம். இத்தனை நாள்  என்னோட ப்ளாக் படிச்சீங்க இல்லை. அதுக்கு குடுங்க. இப்போ புக்ஸ் வாங்கினா காசு குடுத்து படிப்பீர்களே அப்படி.

ரஜினி - ஹா ஹா ஹா ஹா  ஹா.....நான் சும்மா சொன்னேன் சாரு. எனக்கு எங்க நேரம் இருக்கு ப்ளாக் படிக்க. நான் ராகவேந்திர மண்டபம் போய் ரெண்டு வருஷம் ஆச்சி தெரியுமா உங்களுக்கு.

சாரு - எனக்கு வேற வேலை இல்லையா.  நீங்க போறது, வர்றது தெரிஞ்சிக்கறதுக்கு.  இதே கேள்வியை நீங்க கலைஞர் கிட்டயோ அல்லது சோனியா காந்திகிட்டயோ கேப்பீங்களா. அது என்ன எழுத்தாலருன்னாவே  சும்மாவே இருப்பான்னு முடிவு பண்ணிட்டீங்களா.

ரஜினி - நான் என்ன கேட்டுட்டேன், அதுக்கு நீ ஏன் டெல்லி போறே. இனி நான் உன்கிட்டே  அதை கேக்கலை. சரியா. அப்பறம் இந்திரன் பார்த்தீர்களா.

சாரு - பார்த்தேன், பார்த்தேன்....

ரஜினி - எதுக்கு சலிச்சிக்கிறீங்க.  ரொம்ப செலவு பண்ணி டிக்கெட் வாங்கிட்டீன்களோ.

சாரு - டிக்கெட்டா, நானா, காசு குடுத்து வாங்கறதா, சத்தியமா அந்த தப்பு பண்ணமாட்டேன். குடிக்கரதுக்கே காசு இல்லேன்னு சொல்றேன். ஒருத்தரு குடுத்தாரு.

ரஜினி - சும்மா படம் பார்த்ததுக்கே  இந்த சலிப்பா. இதே காசு குடுத்து வாங்கி இருந்தா. நீ என்ன பேச்சி பேசுவே என்று மனசுக்குள் நினைக்கிறார்.

சாரு - உங்க வீட்டுக்கு வந்து அந்த டிக்கெட் காசு வாங்கி இருப்பேன்.

ரஜினி - எப்படி இது.  சரி படம் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க.

சாரு - குப்பை. இந்த மாதிரி ஒரு படத்தை தமிழ் சினிமாவுலே வந்ததில்லை. மகா மட்டம். ஜெடிக்ஸ் டிவி பார்த்தா மாதிரி இருக்கு. கேவலமான இயக்கம். கேவலமான கதை. மொத்தத்தில் மெகா குப்பை. நீங்க பேசாம  இமயமலைக்கே போயிடுங்க. தமிழ் சினிமா போலசிக்கும். இனிமே ஷங்கர் படம் பார்க்க கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன். இதுக்கு மேல சொன்னா என்னோட நேரம்தான் வேஸ்ட்....

ரஜினி - ( கடும் கோபத்தில் ) எப்படி நீங்க சினிமாவுல வராததாலே மக்கள் போலசான்களே அப்படியா. நேரம் இல்லையா அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

சாரு - சும்மா இன்டர்நெட் ல மத்த ப்ளாக் மேஞ்சிகிட்டு இருக்கேன். யாரவது என்ன பத்தி எழுதினா அதை என்னோட ப்ளாக் ல லிங்க் குடுப்பேன்.

ரஜினி - ( எதெல்லாம் ஒரு பொழப்பா )மேஞ்சிகிட்டு இருக்க நீங்க என்ன ஆடா, மாடா.

சாரு - ஹலோ .....நான் 32 வருசமா எழுதிகிட்டு இருக்கேன். ஆனா நான் சோத்துக்கு வழியில்லாம  சுத்தறேன்.  ஆனா....

ரஜினி - அதான் உன் பிரச்சினையா.  இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லை. இந்த பணம் எல்லாம் பொய் . அன்பு தான் உன்மை. அதனால பணத்துமேல ஆச வெச்சிக்காதே.  என்ன மாதிரி இரு.

சாரு  - அப்படியா அப்போ  அந்த ராகவேந்திர மண்டபம் என் பேர்ல எழுதிட றீங்களா.

ரஜினி  - எதுக்கு  எல்லோரையும் கூட்டி வந்து குடிச்சி அங்கேயே வாந்தி எடுக்கவா என்று மனதுக்குள் நினைக்கிறார். அது சாருவுக்கு கேட்டு விடுகிறது வழக்கம் போல் .

சாரு  - இதே கேள்வியை நீங்க மன்மோகன் சிங்க் கிட்ட கேக்க முடியுமா உங்களால. எழுத்தாளர்னா...

ரஜினி -  இனி நான் உன்கிட்ட எதையும் கேக்கலை சரியா. எதுக்கெடுத்தாலும் தேஞ்சி போன ரெகார்ட் போல சொன்னதையே சொல்றீங்க. நீங்க எதுக்கு என்கூட இமயமலை வரக்கூடாது. அங்க இரண்டாயிரம் வருஷம் வாழுற பாபாவை உங்களுக்கு காட்டுறேன்.  அப்புறம் உங்க வாழ்க்கையே மாறிடும் .

சாரு - இப்படி சொல்லித்தான் ஒரு சாமியாரை அறிமுக படுத்தினாங்க. அவனை நம்பி அவன பத்தி நாலு வரி எழுதினேன். அதுக்கே  அவன் மேட்டர் பண்ணும் போது நான் பக்கத்துல இருந்த மாதிரி பேசிகிட்டாங்க.

ரஜினி - இருந்தீங்களா......

சாரு - ரஜினியை முறைக்க....

ரஜினி - சரி விடுங்க இப்போ எனக்கு ஒரு குட்டி கதை தோணுது.  அதாவது.....

சாரு - சாரே....ஒரு எளவு கதையும் வேணாம். ஏற்க்கனவே தலை வலிக்குது.

ரஜினி - என்ன ரொம்ப கோபப்படறே ....நீ எழுதின குட்டிக்கதை குப்பை எல்லாம் நாங்க படிக்கலை. ஓவரா சீன் போடறே... நான் குட்டிக்கதை சொல்லியே தீருவேன்....

சாரு - அதெல்லாம் தமிழ் நாட்டின் பொக்கிசங்கள். இதே கதைகளை நான் ருஷ்யவுல எழுதி இருந்தா. ஒரு வேல இது   பிரான்ஸ் நாடா இருந்தா....

ரஜினி -  உன்னோட வேட்டி கிளியிர மாதிரி அடிச்சி இருப்பாங்க...அதானே...

சாரு - அதனால தான் நான் வேட்டி போடறது இல்லே...அது பெருசுங்க போடறது.

ரஜினி - அப்போ நீங்க யூத்தா...

சாரு - இதே கேள்வியை நீங்க...கமல் கிட்ட கேப்பீங்களா...இல்லேன்னா சிதம்பரம் கிட்ட கேப்பீங்களா...

ரஜினி - ஐயோ ...ஆரம்பிச்சிட்டான்ய....எஸ்கேப்....

சாரு - அது. அந்த பயம் இருக்கட்டும்.

( ஏன் ரஜினி, சாரு  வேறெதற்கு ஹிட்ஸ் தான்.)

இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும் தான்.....சண்டைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

4 comments:

பொன் மாலை பொழுது said...

பிரமாதம் , தொடரலாமே !

வெப் தமிழன் said...

சூப்பருங்கன்னா...கலக்குங்க...வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

NICE

Anonymous said...

excellent, keep it up..

Post a Comment