21 August 2009

இன ஆதிக்கம்

13 வருடங்களுக்கு முன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பென்களை என்னை பார்க்கவைக்கும் நோக்கில் எத்தனையோ முக கிரீம் வாங்கி தடவி சென்றிருக்கிறேன். நான் மாநிறம் தான். வெள்ளை நிற தோலுடைய ஆண்களைத் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று அப்போது நான் நம்பினேன். ஏன் இப்போதும் பெரும்பாலும் மக்கள் அதைத்தான் நம்புகிறார்கள் . சிலர் அதிலிருந்து வெளியில் வந்திருக்கலாம். நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். நான் மட்டும் அல்ல பெரும்பாலும் ஆன்கள் பென்களை கவர ஆன்களும், ஆன்களை கவர பென்களும் இத்தகைய முக கிரீம் உபயோகிப்பதுண்டு. இப்படி ஏன் செய்தோம் என்று யோசிக்கும் போது, அது விளம்பரங்கள் செய்த மாயை என்று எனக்கு புரிந்தது. மிகவும் தாமதமாக புரிந்தாலும் புரிந்தது. உண்மையில் புரிந்ததென்று சொல்வதை காட்டிலும் உறைத்தது.

இப்படிப்பட்ட முக கிரீம் விற்ப்பவர்கள் எப்படி விளம்பரம் செய்கிறார்கள் என்று பார்த்தாள் ஒருவன் கறுப்பாக அல்லது மாநிறமாக இருப்பான். அவனை எந்த பென்னும் பார்க்கமாட்டாள். உடனே இந்த கிரீம் வாங்கி தடவிக்கொண்டதும் அவன் முகம் மட்டும் வெள்ளையாகி விடும். அவ்வளவுதான் அவள் இவனை பார்த்தும் கொஞ்சுவாள். இப்படியாக விளம்பரம் வரும் பட்சத்தில் மக்கள் இதை உண்மை என்று நம்பி வாங்கி உபயோகிக்காமல் என்ன செய்வார்கள். ஒரு கருப்பான அல்லது மாநிறமான ஒருவன் அல்லது ஒருத்தி முகத்தை மட்டும் வெள்ளையாக்கிகொண்டால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். இதில் ஒரு தந்திரம் என்னவென்றால் உன்மையில் இது ஒரு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்த முக கிரீம் பூசிக்கொண்டு உடனே பவுடர் பூசவேண்டும். சிலமணி நேரங்கள் வெள்ளையாக இருப்பது போல் இருக்கும். பிறகு முகத்தை கழுவிக்கொண்டால் இதற்க்கு முன் இருந்த முகத்தை விட இன்னும் கேவலமாக மாற்றிவிடும் அமிலங்கள் இதில் இருக்கின்றன.

இதனால் ஒரு பிரயோஜனம் இருக்கிறது அல்லது இல்லை என்பது ஒருபுறமிருக்க வெள்ளைகாறனால் தயாரித்து , விளம்பரம் செய்து விற்கப்படுகிற இப்படிப்பட்ட முக கிரீம் களின் நோக்கம் ஒட்டுமொத்த கருப்பு மக்களை இழிவுபடுத்துவதே. இப்படிப்பட்ட முக கிரீம் தொலைக்காட்சிகளில் கூவி கூவி விற்கும் இவர்கள் சொல்லும் ஒட்டுமொத்த கருத்து, கறுப்பாக பிறத்தல் அவமானம். அசிங்கம், கேவலம், இழிவு. நீ கறுப்பாக இருப்பதால் உன்னை ஒரு பென்னும் அல்லது ஒரு ஆனும் ( ஆனாக இருந்தால் பென்னும், பென்னாகள் இருந்தால் ஆனும்) ஏறெடுத்து கூட பார்க்கமாட்டாள். நீ சீக்கிரம் எங்கள் கிரீம் வாங்கி உன் முகத்தில் தடவிக்கொண்டாள் விரைவில் நீ வெள்ளையாகி விடுவாய். அதன் பிறகு உன்னை ஊரில் உள்ள அத்தனை பென்களும் அல்லது ஆன்களும் கொத்திக்கொண்டு பொய் விடுவார்கள் என்பது இவர்கள் சொல்லவருவது.

சரி உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம் இந்தியா கம்பெனி ஒன்று வெள்ளைக்காரர்கள் இருக்கும் ஒருநாட்டில் ஒரு முக கிரீம் அறிமுகம் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம் . விளம்பரமும் தயார். அது என்ன விளம்பரம் என்றாள், பார்த்தாலே கண் கூசும் அளவுக்கு ஒரு வெள்ளையன் அவனை எந்த பென்னும் கண்டு கொள்ளவில்லை. பிறகு அவன் அந்த கிரீம் போட்டதும் முகம் மட்டும் கறுப்பாக மாறுகிறது பிறகு அதே வீதியில் செல்கிறான் அத்தனை பென்களும் அவன் மேல் விழுகிறார்கள். இந்த விளம்பரத்தை வெள்ளைக்கார நாடுகள் அவர்கள் தொலைக்காட்சிகளில் போட அனுமதிப்பார்களா நிச்சயமாக மாட்டார்கள்.மாறாக அந்த கம்பெனி மீது ஒரு வழக்கு தொடர வாய்ப்பே அதிகம் இருக்கிறது . எத்தனை லாபம் வந்தாலும் கூட அவர்கள் அதை அனுமதிக்கமாட்டார்கள். அது அவர்களை அவமதிப்பதாக அவர்கள் கருதுவார்கள். நாம் ஏன் அப்படி கருதுவதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இப்படிப்பட்ட ஒரு கறுப்பின சமுதாயத்தையே வேருக்கவைக்க தக்க விளம்பரம் செய்யும் முக கிரீம் கம்பெனி களின் விளம்பரங்களை நம் அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட விளம்பரங்களை நாம் அனுமதிப்பதென்பது நாம் பாவப்பட்டவர்கள், நாம் இழிவானவர்கள் என்று நாமே ஒற்றுக்கொள்வது போன்ற ஒரு செயலாகும். வெள்ளைக்காரன் விளம்பரம் செய்து மாட்டு மூத்திரத்தை கூட குளிர்பானம் என்று சொல்லி விற்று விடும் திறமை சாலிதான். மற்ற அத்தனை வியாபர பொருள்களும் ஒருவகை இந்த முக கிரீம் வேறுவகை . முக கிரீம் விளம்பரம் என்பது ஒரு மிகப்பெரிய சமுதாயத்தையே அவமானப்படுத்தும் நோக்கம்.

பற்கள் வெள்ளையாக்கும் கிரீம் அதற்க்கு விளம்பரம் அனுமதித்தோம். துணிகள் வெள்ளையாக்கும் பவுடர் அதற்க்கு விளம்பரம் அனுமதித்தோம். பாத்திரங்கள், வாகனங்கள் ஏன் கழிப்பறை வெள்ளையாக்கும் விளம்பரங்கள். அனால் மனிதனை வெள்ளையாக்கும் விளம்பரங்களை நாம் அனுமதிக்கக்கூடாது. அது வெள்ளைக்காரர்களால் கறுப்பினத்தவர்களுக்கு சொல்லும் செய்து. அது என்னவென்றாள். வெள்ளையாய் பிறப்பது கெளரவம். கருப்பை பிறப்பது அசிங்கம்.

உன்மையில் கருப்பு தான் மனிதனின் உண்மை நிறம். ஆதாம் ஏவாள் கருப்பாகத்தான் இருக்கவேண்டும். எனேன்றால் முதல் மனிதன் உருவான இடம் ஆப்பிரிக்க தான் . பின்னாளில் அங்கிருந்து புலம்பெயர்ந்த மனிதர்கள் அந்தந்த இடங்களுக்கேர்ப்ப நிறம் மாறியிருக்கிறார்கள். அதற்காக வெள்ளையாக இருப்பது அவமானம் கேவலம் என்று சொல்லவில்லை, கருப்பாக இருப்பது அவமானம், கேவலம் இல்லை என்று சொல்லுவதே.

வெள்ளைக்காரன் சொல்வதர்க்கெல்லாம் ஆமாம் போடும் ஒரு கும்பல் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு தேவை பணம். எது எப்படிபோனாலும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் வசதியாக இருக்க எதைவேண்டுமானாலும் செய்வார்கள். வெள்ளைக்காரன் தரும் பொருள்களை கூவி, கூவி தொலைக்காட்சிகளில் விற்பது இவர்கள் வேலை. ஒவ்வொரு தனி தனி விளம்பரங்களின் நோக்கம் என்ன, அது எப்படிப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு சொல்கிறது என்று இவர்கள் யோசிப்பதே இல்லை. இவர்களுக்கு தெரிந்தது இரண்டு. ஒன்று முதலாளிகளுக்கு சலாம் போடுவது. மற்றொன்று பணம். வேறு எதையும் பற்றி இவர்கள் கவலை படுவதில்லை. இவர்களுக்கு தேவை வெளிநாட்டுக்கரர்களின் சபாஷ்.

இதை பற்றி யாராவது பெரியளவில் பேசுவார்கள் அல்லது எழுதுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். யாரும் இதுவரை இது பற்றி யாரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை . எனக்கு ஒரு கோர்வையாக எழுதவராது என்பதற்காகவே இது வரை எழுதவில்லை. இதிலும் சொல்லவந்த விஷத்தை சரியாக சொன்னோமா என்று எனக்கு தெரியவில்லை. அனால் சொல்லவேண்டும் என்று நான் நினைத்தது முக கிரீம் விளம்பரங்கள் ஒரு இன சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்காதீர்கள். முக கிரீம் மட்டும் அல்ல எந்த விளம்பரமும் ஒரு தனிப்பட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் எடுக்கவேண்டாம் என்பதே. அதேபோல் மக்களும் அதை அங்கீகரிக்கக்கூடாது என்பதே.

இன்னும் எதையோ விட்டுவிட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு அப்படி எதாவது நான் விட்டதாக தோன்றினால் பின்னூட்டம் போட்டு தெரிவிக்கவும்.

3 comments:

Thomas Ruban said...

very very super.

Thomas Ruban said...

அருமையான கருத்து எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளிர்கள்.

கருத்துக்கும் பதிவுக்கும் நன்றி.

கிறுக்கன் said...

thanks for ur compliments.

Post a Comment